மாநில அரசுகளின் இலவச திட்டங்களால் இலங்கை நிலை ஏற்படலாம் - பிரதமர் மோடியிடம் அதிகாரிகள் கவலை

மாநில அரசுகளின் இலவச திட்டங்களால் இலங்கை நிலை ஏற்படலாம் - பிரதமர் மோடியிடம் அதிகாரிகள் கவலை
X

பிரதமர் நரேந்திர மோடி

மாநில அரசுகளின் இலவச திட்டங்களால், இலங்கை போன்ற நிலை ஏற்படலாம் என உயர்மட்ட ஆலோசனை கூட்டத்தில் அதிகாரிகள் கவலை தெரிவித்துள்ளனர்.

மாநில அரசுகளில் பணியாற்றி தற்போது மத்திய அரசு துறைகளிலுள்ள செயலாளர்கள் உட்பட பல்வேறு துறைகளின் உயர்மட்ட அதிகாரிகளுடன் பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை நடத்தினார். சுமார் 4 மணிநேரம் நீடித்த இந்த கூட்டத்தில், தேர்தல் நேரத்தில் அரசியல் கட்சிகள் அறிவிக்கும் இலவசங்கள் மற்றும் கவர்ச்சிக்கர திட்டங்கள் குறித்து அதிகாரிகள் பேசியுள்ளனர்.

பஞ்சாப், டெல்லி, தெலங்கானா, ஆந்திரா, மேற்குவங்கம் ஆகியவற்றில் மாநில அரசுகள் அறிவித்துள்ள திட்டங்கள் பொருளாதார ரீதியாக நிலையானவை இல்லை என பிரதமரிடம் அதிகாரிகள் கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது. இலவசங்களை வழங்கும் சில மாநிலங்கள் இலங்கை போன்ற பொருளாதார நெருக்கடியை சந்திக்க நேரிடலாம் என பிரதமர் மோடியிடம் பல்வேறு துறைகளின் செயலாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

அத்தகைய இலவச திட்டங்களால் மாநிலங்களின் பொருளாதார நிலை அதலபாதாளத்தை நோக்கி செல்வதாகவும் மத்திய அரசு உதவாவிட்டால் சம்பந்தப்பட்ட மாநிலங்கள் பெரும் வீழ்ச்சியை சந்தித்திருக்கும் எனவும் தெரிவித்துள்ளனர். மாநில நிதிநிலைமையை சீரமைக்காமல் இலவச திட்டங்களை தொடர்ந்தால் இலங்கை, கிரீஸ் போன்ற நாடுகளில் ஏற்பட்டதுபோன்ற பொருளாதார நெருக்கடியை அத்தகைய மாநில அரசுகள் சந்திக்க நேரிடும் என பிரதமர் மோடியிடம் பல்வேறு துறைகளின் செயலாளர்கள் கவலையுடன் எடுத்துரைத்துள்ளனர்.

Tags

Next Story
இது தெரியாம போச்சே ,காலை எழுந்து வெந்நீர் பருகுவதால் இவ்வளவு நன்மைகள் இருக்கா