விளையாட்டு வீரர்களுக்கு ஓய்வூதியம் வழங்கும் திட்டம் துவக்கம்

அமைச்சர் அனுராக் சிங் தாக்கூர் (பைல் படம்)
விளையாட்டு வீரர்களுக்கு ரொக்க விருதுகள், ஓய்வூதியம் உள்ளிட்ட பலன்களை வழங்கும் திருத்தப்பட்ட திட்டங்களை மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் டெல்லியில் தொடங்கி வைத்தார். விளையாட்டுத் துறையின் இந்த திட்டங்களுக்கான வலைதளம், தேசிய விளையாட்டு மேம்பாட்டு நிதி இணையதளம் ஆகியவற்றையும் அவர் அறிமுகப்படுத்தினார்.
நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் அனுராக் சிங் தாக்கூர், சர்வதேச விளையாட்டு போட்டிகளில் பதக்கம் வென்றவர்கள் மற்றும் அவர்களின் பயிற்சியாளர்களுக்கு ரொக்கப்பரிசுகள் மற்றும் விருதுகள் வழங்கும் திட்டம், விளையாட்டு வீரர்களுக்கான தேசிய நலன் மற்றும் ஓய்வூதிய திட்டங்களில் விளையாட்டு அமைச்சகம் பல முக்கிய திருத்தங்களை கொண்டு வந்துள்ளதாக கூறினார். விளையாட்டு வீரர்கள் மிகவும் எளிதில் அணுகுவதற்கு உகந்ததாகவும், வெளிப்படையானதாகவும் இருக்கும் வகையில் இந்தத் திருத்தங்களை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். இப்போது, தனிப்பட்ட எந்தவொரு விளையாட்டு வீரரும் அவரவர் தகுதிக்கு ஏற்ப மூன்று திட்டங்களுக்கும் நேரடியாக விண்ணப்பிக்கலாம் என்றும் அவர் குறிப்பிட்டார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu