'கில் பட்டன்' மூலம் தன்னைத்தானே அழித்துக் கொள்ளும் விண்கலம்

கில் பட்டன் மூலம் தன்னைத்தானே அழித்துக் கொள்ளும் விண்கலம்
X

டிடிடிஐ-டெக்னாலஜி-கான்க்ளேவ்-2021 இன் தொடக்க விழா 

'கில் பட்டன்' மூலம் விண்கலம் தன்னைத்தானே அழித்துக்கொள்ளும் புதிய தொழில்நுட்பத்தை ஆராய்ந்து வருவதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.

அடுத்த நான்கு முதல் ஐந்து தசாப்தங்களுக்கு நாட்டை எதிர்காலத்திற்கு தயார்படுத்த உதவும் எதிர்கால தொழில்நுட்பங்களை உருவாக்க இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) விரும்புகிறது,

அதன் அடிப்படையில், விண்வெளித் துறையில் சாத்தியமான தொழில்நுட்பங்களைத் கண்டறிவதற்கான எதிர்கால தொழில்நுட்ப உச்சிமாநாடு DTDI-Technology-Conclave- 2021 ஐ இஸ்ரோ நடத்தியது. தொழில்நுட்ப வளர்ச்சி மற்றும் கண்டுபிடிப்பு இயக்குநரகம் அல்லது DTDI என்பது இஸ்ரோவின் தொழில்நுட்ப மேம்பாட்டுப் பிரிவாகும். இந்த மாநாடு நவம்பர் 26 அன்று நிறைவடைந்தது.

இஸ்ரோவின் அறிவியல் செயலர் ஆர். உமாமகேஸ்வரன், விண்வெளித் துறைக்கான எதிர்கால மற்றும் சீர்குலைக்கும் தொழில்நுட்பங்களைப் பற்றிய கருத்துகளை வழங்கினார்.

இஸ்ரோ தலைவர் டாக்டர் கே சிவன், ஹேக்-ப்ரூஃப் கம்யூனிகேஷன் சிஸ்டம்ஸ், தன்னை தானே அழித்துக்கொள்ளும் செயற்கைக்கோள்கள், மனித உருவ ரோபோக்கள், விண்வெளி அடிப்படையிலான சூரிய சக்தி, நுண்ணறிவு செயற்கைக்கோள்கள் மற்றும் விண்வெளி வாகனங்கள், மேக்-இன்-ஸ்பேஸ் கான்செப்ட் மற்றும் செயற்கை நுண்ணறிவு போன்ற பல எதிர்கால தொழில்நுட்பங்களை குறிப்பிட்டார்.

"நமது அனைத்து ராக்கெட்டுகளிலும் உலோக கவசங்கள் உள்ளன, அவை ஏவப்பட்ட பிறகு கடலில் விழுகின்றன அல்லது (இறுதி-நிலை) விண்வெளி குப்பைகளாக மாறுகின்றன. ராக்கெட்டுகள் தங்களைத் தாங்களே அழித்துக்கொள்ளும் விதத்திலான தொழில்நுட்பத்தில் நாங்கள் பணியாற்றி வருகிறோம். இதன் மூலமாக கடல் மற்றும் விண்வெளிக் குப்பைகளில் கழிவுகள் விழுவதை தவிர்க்க முடியும். மோட்டார்களுடன் சேர்ந்து எரிக்கக்கூடிய கவசங்களுக்கான சிறப்புப் பொருட்களை நாங்கள் ஆராய்ந்து வருகிறோம்," என்று சிவன் கூறினார் .

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!