தென்கிழக்கு கோல்ஃபீல்ட்ஸ் நிறுவனம் 100 மில்லியன் டன் நிலக்கரி அனுப்பி சாதனை

பைல் படம்
நிலக்கரி இந்தியாவின் துணை நிறுவனமான தென்கிழக்கு கோல்ஃபீல்ட்ஸ் நிறுவனம் 2023-24 நிதியாண்டில் 100 மில்லியன் டன் நிலக்கரியை மின் நிலையங்கள் உள்ளிட்டவற்றுக்கு அனுப்பியுள்ளது. சத்தீஸ்கரைத் தளமாகக் கொண்ட இந்த நிறுவனம் தொடங்கப்பட்டதிலிருந்து அடைந்த அதிவேக 100 மெட்ரிக் டன் நிலக்கரி அனுப்புதல் இதுவாகும்.
கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் சுமார் 85 மில்லியன் டன் நிலக்கரி அனுப்பப்பட்டது. இதனால் இந்த நிதியாண்டில் நிறுவனம் 17.65% வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது.
நாடு முழுவதும் உள்ள மின் நிலையங்களுக்கு சுமார் 81 மில்லியன் டன் நிலக்கரியை நிறுவனம் அனுப்பியுள்ளது. இதன் மூலம் மொத்த நிலக்கரியில் 80% க்கும் அதிகமானவை மின் உற்பத்திக்கு பயன்படுத்தப்படுகிறது. வரவிருக்கும் பண்டிகை காலத்தை மனதில் கொண்டு, மின்தேவை உச்சத்தை எட்டும் நிலையில், இது குறிப்பிடத்தக்க சாதனையாகும்.
கோர்பா மாவட்டத்தில் அமைந்துள்ள தென்கிழக்கு கோல்ஃபீல்ட்ஸ் நிறுவனத்தின் மெகா திட்டங்களான கெவ்ரா, டிப்கா மற்றும் குஸ்முண்டா ஆகியவை 100 மில்லியன் டன் நிலக்கரியை அனுப்புவதில் கணிசமான பங்களிப்பை அளித்துள்ளன.
நாட்டின் மிகப்பெரிய நிலக்கரி சுரங்கமான கெவ்ரா 30.3 மில்லியன் டன் நிலக்கரியையும், டிப்கா மற்றும் குஸ்முண்டா முறையே 19.1 மில்லியன் டன் மற்றும் 25.1 மில்லியன் டன் நிலக்கரியையும் அனுப்பியுள்ளன. இந்த மூன்று மெகா திட்டங்களில் இருந்து 74 சதவீத நிலக்கரி அனுப்பப்பட்டுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu