பாம்புபிடி மன்னன் வாவா சுரேஷ் உடல்நிலையில் முன்னேற்றம்
வாவா சுரேஷ்.
கேரள மாநிலத்தைச் சேர்ந்தவர் பிரபல பாம்பு பிடி வீரர் வாவா சுரேஷ், வயது 48. இயற்கை, சுற்றுச்சூழல் ஆர்வலர். பாம்புகளை நேசிப்பவர். இவர், இதுவரை சுமார் 50,000க்கும் மேற்பட்ட பாம்புகளை, எந்தவித கருவியும் இல்லாமல் லாவகமாக பிடித்துள்ளார். இதில், சிறிய பாம்புகள் மட்டுமில்லாது கரு நாகப்பாம்பு உள்ளிட்ட அரிய வகை பாம்புகளும் அடங்கும்.
இவர், பாம்புகளை லாவகமாகப் பிடிக்கும் காட்சிகள், சமூக வலைத்தளங்களில் வெளியாகி டிரெண்டிங் ஆவதுண்டு. அதே நேரம், எதிர்பாராத சில நேரங்களில் பாம்பு கடித்து, மருத்துவமனையில் வாவா சுரேஷ் அனுமதிக்கப்பட்ட சம்பவங்களும் நடந்துள்ளன. அண்மையில் அதே பரிதாப நிலை அவருக்கு ஏற்பட்டது.
கேரள மாநிலம், கோட்டயம், சங்கனாச்சேரி அருகே உள்ள குறிச்சி பகுதியில் நாகப் பாம்பு பிடிக்க, வாவா சுரேஷ் அழைக்கப்பட்டார். அங்கு, சுமார் 7 அடி நீளமுள்ள நாகப்பாம்பை பிடித்த சுரேஷ், அதை ஒரு சாக்கில் அடைக்க முயன்றார். அப்போது, திடீரென வா வா சுரேஷின் கையில் இருந்து பாம்பு நழுவ, வலது கால் தொடையில் பாம்பு கடித்தது.
உடனடியாக, கடிபட்ட இடத்தை நன்றாக அழுத்தி ரத்தத்தை சுரேஷ் வெளியேற்றினார். பாம்பு மீண்டும் பதுங்க முற்படுவதற்குள் அதை பிடித்து, ஒரு டப்பாவுக்குள் அடைத்துவிட்டு மயங்கினார். சுயநினைவை இழந்த நிலையில் , கோட்டையம் அரசு மருத்துவமை ஐ.சி.யு.வில் அனுமதிக்கப்பட்டார். தீவிர சிகிச்சையின் பலனாக, தற்போது கோமாவில் இருந்து மீண்டுள்ளார். சிகிச்சை அளிக்கும் மருத்துவர்களிடம் ஒருசில வார்த்தைகள் பேசியதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu