/* */

இந்தியாவின் 'மெலடி குயின்' லதா மங்கேஷ்கர் காலமானார்

இந்தியாவின் மெலடி குயின் என்று போற்றப்படும் பிரபல பின்னணி பாடகி லதா மங்கேஷ்கர் காலமானார். அவருக்கு வயது, 92.

HIGHLIGHTS

இந்தியாவின்  மெலடி குயின் லதா மங்கேஷ்கர் காலமானார்
X

இசைக்குயில் என்றும், இந்தியாவின் நைட்டிங்கேல் எனவும், மெலடி குயின் என்றும் ரசிகர்களால் அழைக்கப்பட்டு வந்தவர் பழம் பெரும் பின்னணி பாடகி லதா மங்கேஷ்கர். இவர், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, ஜனவரி 8,ம் தேதி, மும்பை ப்ரீச் கேண்டி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்தார்.

இந்நிலையில், இன்று காலை, லதா மங்கேஷ்கரின் உடல்நிலை கவலைக்கிடமானது. அவருக்கு உயிர் காக்கும் சிகிச்சை கருவிகள் பொருத்தப்பட்டும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும், சிகிச்சை பலனின்றி லதா மங்கேஷ்கர் காலமானார். அவரது மறைவை லதாவின் சகோதரி உஷா மங்கேஷ்கர் உறுதி செய்தார்.

கடந்த, 1929- ஆம் ஆண்டு மத்திய பிரதேசம் மாநிலம், இந்தூரில் பிறந்தவர் லதா மங்கேஷ்கர். 1942-ல் தனது 13-வது வயதில் இசை வாழ்க்கையைத் தொடங்கினார்; ஹிந்தி, தமிழ் உள்பட பல்வேறு மொழிகளில் 30,000 பாடல்களுக்கு மேல் பாடியுமிருக்கிறார். தமிழில் சத்யா படத்தில் "வளையோசை கலகலவென', 'ஆராரோ ஆராரோ', 'எங்கிருந்தோ அழைக்கும் என் ஜீவன்' உட்பட பல்வேறு பாடல்களை பாடியுள்ளார்.

பத்ம பூஷன், பத்ம விபூஷண் மற்றும் தாதா சாஹேப் பால்கே விருது மற்றும் பல கவுரவங்களை லதா மங்கேஷ்கர் பெற்றுள்ளார். கடந்த்1999 நவம்பர் முதல் 2005 நவம்பர் வரை மாநிலங்களவை உறுப்பினராகவும் லதா மங்கேஷ்கர் பதவி வகித்துள்ளார்.

எம்.எஸ். சுப்புலட்சுமி உள்ளிட்டோருடன் லதா மங்கேஷ்கர்.

லதா மங்கேஷ்கரின் மறைவு, இசை ரசிகர்களுக்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. அவரின் மறைவுக்கு, பிரபலங்கள், முக்கிய தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். பிரதமர், குடியரசு தலைவர், திரையுலக பிரபலங்கள், இரங்கல் தெரிவித்து வருகின்றனர். தமிழகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சினிமாத்துறையினர் தங்களின் இரங்கலை வெளியிட்டுள்ளனர்.

Updated On: 6 Feb 2022 1:31 PM GMT

Related News

Latest News

  1. தென்காசி
    10ம் வகுப்பில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவ,மாணவிகளுக்கு பாராட்டு...
  2. சுற்றுலா
    அண்டார்டிகாவில் ஒழுங்குபடுத்தப்பட்ட சுற்றுலா: சுற்றுச்சூழலை காப்பாற்ற...
  3. லைஃப்ஸ்டைல்
    பதப்படுத்தப்பட்ட உணவுகளை உட்கொள்வது ஆபத்து! ஹார்வர்ட் பல்கலைகழக ஆய்வு
  4. லைஃப்ஸ்டைல்
    புரதச் சத்துக்களைத் தவிர்க்க மக்களை வலியுறுத்தும் ஐசிஎம்ஆர் மருத்துவக்...
  5. சோழவந்தான்
    சோழவந்தான் அருகே முள்ளிப்பள்ளத்தில் இலவச இருதய மருத்துவ முகாம்..!
  6. ஆலங்குளம்
    ஆலங்குளம் அருகே நூதன முறையில் பண மோசடி : 4 பேர் கைது..!
  7. குமாரபாளையம்
    சேலம் கோவை புறவழிச் சாலை பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல்
  8. காஞ்சிபுரம்
    செய்யாறு பாலத்தில் எல்இடி விளக்குகள் பொருத்தும் பணி
  9. மாதவரம்
    சரித்திர பதிவேடு குற்றவாளியை கொலை செய்தவர்கள் கைது..!
  10. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரத்தில் 30 நிமிட கோடை மழை : பொதுமக்கள் மகிழ்ச்சி..!