சாய்னா நேவாலிடம் மன்னிப்பு கேட்டார் நடிகர் சித்தார்த்
பிரபல பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவால், பிரதமர் மோடியின் பாதுகாப்பு குளறுபடியை விமர்சனம் செய்து, ஜனவரி 6ம் தேதி, டிவிட்டரில் பதிவிட்டிருந்தார். இதற்கு பதில் தரும் வகையில் நடிகர் சித்தார்த் செய்த டிவிட், சர்ச்சையை ஏற்படுத்தியது. பாலியல் ரீதியாக தொடர்புபடுத்தி, சாய்னா நேவாலை அவர் விமர்சனம் செய்ததாக பலரும் ஆவேசமாக கருத்து தெரிவித்தனர்.
பல்வேறு ஆர்வலர்கள், திரைப்பிரபலங்கள், அரசியல்வாதிகள் பலரும், சித்தார்த்தின் கருத்துக்களுக்கு அவரைக் கண்டித்தனர். சாய்னா நேவாலிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் வலியுறுத்தினர். நடிகர் சித்தார்த்தின் டிவிட்டர் கணக்கை முடக்குமாறு ட்விட்டரை தேசிய மகளிர் ஆணையம் (NCW) கேட்டுக் கொண்டது.
சர்ச்சையைத் தொடர்ந்து, சித்தார்த் திங்களன்று பதில் அளித்தார். அதில், யாரையும் அவமரியாதை செய்ய, தாம் விரும்பவில்லை. "நுட்பமான சேவல்" என்ற ட்வீட்டில் எந்தவிதமான தூண்டுதலும் இல்லை. சேவல் மற்றும் காளை. அதுதான் குறிப்பு. மற்றபடி படிப்பது நியாயமற்றது மற்றும் வழிநடத்துகிறது. அவமரியாதையாக எதுவும் நோக்கப்படவில்லை. காலம் என்று, ட்வீட் செய்தார்.
எனினும், நடிகர் சித்தார்த்திற்கு எதிராக கண்டனக்குரல்கள் அடங்கவில்லை. அவர் மீது காவல்துறையில் வழக்குகளும் பதிவாகின. நிலைமை விபரீதமாவதை உணர்ந்த நடிகர் சித்தார்த், வேறுவழியின்றி, மன்னிப்பு கோரியுள்ளார்.
இது தொடர்பாக டிவிட்டரில் அவர் இணைத்துள்ள கடிதத்தில், "அன்புள்ள சாய்னா, சில நாட்களுக்கு முன்பு உங்கள் ட்வீட்டுக்கு பதிலடியாக நான் எழுதிய எனது முரட்டுத்தனமான நகைச்சுவைக்காக நான் உங்களிடம் மன்னிப்பு கேட்க விரும்புகிறேன். நான் உங்களுடன் பல விஷயங்களில் உடன்படாமல் இருக்கலாம். ஆனால் உங்கள் ட்வீட்டைப் படிக்கும் போது எனக்கு ஏற்பட்ட ஏமாற்றம் அல்லது கோபம் கூட, என் தொனியையும் வார்த்தைகளையும் நியாயப்படுத்த முடியாது.
அதைவிட அதிக கருணை என்னிடம் இருக்கிறது என்று எனக்குத் தெரியும். நகைச்சுவையை பொறுத்தவரை … அந்த நகைச்சுவையை விளக்க வேண்டும் என்றால், அது ஒரு நல்ல நகைச்சுவையாக இல்லை, அது இறங்காத நகைச்சுவைக்கு மன்னிக்கவும்," என்று அவர் எழுதினார்.
மேலும், "தீங்கிழைக்கும் நோக்கம் எனக்கு இல்லை. நான் ஒரு உறுதியான பெண்ணிய கூட்டாளி மற்றும் எனது ட்வீட்டில் பாலினம் எதுவும் குறிப்பிடப்படவில்லை என்று நான் உங்களுக்கு உறுதியளிக்கிறேன். நீங்கள் என் கடிதத்தை ஏற்றுக்கொள்வீர்கள். நீங்கள் எப்போதும் என் சாம்பியன். உண்மையுடன் , சித்தார்த்," என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu