38 ஆண்டுகளுக்குப் பிறகு கண்டெடுக்கப்பட்ட ராணுவ வீரர் உடல்
லான்ஸ் நாயக் சேகர்
சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் நிறைவடைந்ததையும், சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்றவர்களின் தியாகத்தை நமது நாட்டு மக்கள் நினைவுகூரும் நிலையில், உத்தரகாண்ட் மாநிலம் ஹல்த்வானியில் உள்ள ஒரு குடும்பத்தினரின் 38 ஆண்டுகால நீண்ட காத்திருப்பு தற்போது முடிவுக்கு வந்துள்ளது
சியாச்சின் பனிப்பாறையை ஆக்கிரமித்து, பாகிஸ்தானிய நிலைகள் மீது முழுமையான ஆதிக்கத்தை உறுதி செய்ததால், 1984 ஆம் ஆண்டு மேக்தூத் நடவடிக்கை இந்திய ராணுவம் இன்றுவரை மேற்கொண்ட சிறந்த இராணுவ நடவடிக்கைகளில் ஒன்றாக உள்ளது.
பாகிஸ்தானியர்கள் கைப்பற்ற துடித்த முக்கிய இடமான பாயிண்ட் 5965ஐ கைப்பற்றும் பணி வழங்கப்பட்ட குழுவில் லான்ஸ் நாயக் சந்திர சேகர் இருந்தார். லான்ஸ் நாயக் சேகர் அங்கம் வகித்த 19 குமாவோன் படைப்பிரிவைச் சேர்ந்த ஒரு குழு உடனடியாக அனுப்பப்பட்டது. மே 29, 1984ல் நடந்த சியாச்சின் பனிப்பாறையை ஆக்கிரமித்த மேக்தூத் நடவடிக்கையின் கீழ் இது முதல் நடவடிக்கைகளில் ஒன்றாகும்.
வீரர்கள் அங்கு இரவு நிறுத்தப்பட்டபோது, அந்த படைப்பிரிவு பனிச்சரிவில் சிக்கியது, இதில் ஒரு அதிகாரி, இரண்டாவது லெப்டினன்ட் பிஎஸ் பண்டிர் உட்பட 18 இந்திய இராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர். 14 பேரின் சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், 5 பேரை காணவில்லை.
இந்நிலையில், ஆகஸ்ட் 13ம் தேதி சியாச்சினில் 16,000 அடி உயரத்தில் ராணுவ வீரர் ஒருவரின் எலும்புக்கூடு கண்டுபிடிக்கப்பட்டது. எச்சங்களுடன், லான்ஸ் நாயக் சந்திர சேகரை அடையாளம் காண உதவிய ராணுவ எண் கொண்ட அடையாள வில்லை ஒன்றும் கண்டுபிடிக்கப்பட்டது.
கோடை மாதங்களில், பனி உருகும்போது, காணாமல் போன வீரர்களைக் கண்டறிய ரோந்துப் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. சியாச்சின் பனிப்பாறையில் உள்ள பழைய பதுங்கு குழிக்குள் எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டன
லான்ஸ் நாயக் சந்திரசேகர் இறந்தபோது அவரது இளைய மகளுக்கு நான்கு வயது, மூத்தவளுக்கு எட்டு வயது. சந்திரசேகரின் மனைவி, 65, மற்றும் இரண்டு மகள்கள், மற்றும் குடும்பத்தினர் ஆகியோரின் 38 ஆண்டுகளாக நீண்ட காத்திருப்பு மட்டுமல்ல, அவரது பிரிவின் பல வீரர்கள் மற்றும் உறவினர்கள் அனைவரும் துணிச்சலான வீரருக்கு இறுதி விடைகொடுக்க தயாராக உள்ளனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu