சிவராத்திரி விழா: தமிழகம் வருகிறார் ஜனாதிபதி திரௌபதி முர்மு?
ஜனாதிபதி திரௌபதி முர்மு (பைல் படம்).
Draupadi Murmu in Tamil-சிவராத்திரியானது மாதந்தோறும் வரும். ஆனால் மாசி மாத தேய்பிறை சதுர்த்தியில் வரும் சிவராத்திரியே 'மகா சிவராத்திரி' என்றழைக்கப்படுகிறது. இந்த சிவராத்திரியானது மாசி மாதத்தில் கிருஷ்ண பக்ஷத்தின் பதினான்காவது நாளில் கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் இந்த ஆண்டு மகா சிவராத்திரி வருகிற 18-ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது.
இதனையொட்டி குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு தமிழ்நாடு வருகை தர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் சுவாமி தரிசனம் செய்வதற்காக அவர் வர இருப்பதாக கூறப்படுகிறது. அன்றைய தினம் டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம், மதுரை வருகிறார்.
அதனைத் தொடர்ந்து மதியம் 12 மணிக்கு மேல் மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் சாமி தரினம் செய்கிறார். பின்னர் மீண்டும் விமான நிலையம் சென்று அங்கிருந்து கோவை செல்லும் அவர், ஈஷா மையத்தில் நடக்கும் மகா சிவராத்திரி விழாவில் கலந்து கொள்ள உள்ளார் என்று கூறப்படுகிறது. இதனையொட்டி பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளதாக காவல் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu