புதிய மங்களூர் துறைமுகத்தில் 3 திட்டங்களை தொடங்கி வைத்தார் மத்திய அமைச்சர்
புதிய மங்களூர் துறைமுகத்தில் 3 திட்டங்களுக்கு, மத்திய துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து துறை அமைச்சர் சர்பானந்தா சோனோவால் தொடங்கிவைத்து அடிக்கல் நாட்டினார்.
இந்நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:
துறைமுகத்தில் லாரிகள் நிறுத்துவதற்கு, கூடுதலாக 17,000 சதுர மீட்டர் பரப்பில் ரூ.1.9 கோடி செலவில் இடவசதி ஏற்படுத்தப்படும். இங்கு கான்கிரீட் தரை, நுழைவு வாயில், விடுதி, தங்கும் இடங்கள் ஆகியவை 2022-23ம் ஆண்டில் ரூ.5 கோடி செலவில் அமைக்கப்படும். இந்த துறைமுகத்தின் நிறுவனர் யு.எஸ் மல்லையா பெயரில் உள்ள நுழைவு வாயில் ரூ.3.22 கோடி செலவில் மாற்றியமைக்கப்படும். இந்தப் பணிகள் 2022 மார்ச் மாதத்துக்குள் முடிவடையும். இங்குள்ள வர்த்தக வளர்ச்சி மையம், ஏற்றுமதி, இறக்குமதி தொழில் செய்பவர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் வழங்கும்.
மேம்பட்ட உள்நாட்டு இணைப்பு காரணமாக, கன்டெய்னர் மற்றும் சரக்கு போக்குவரத்து, இந்த துறைமுகத்தில் அதிகரிக்கிறது. புதிய மங்களூர் துறைமுகத்திலிருந்து கர்நாடக மாநிலம் தக்ஷின் கன்னடா மாவட்டம் வரை தினந்தோறும் 500 லாரிகள் சரக்குகளை ஏற்றி, இறக்க வந்து செல்கின்றன. இவ்வாறு சர்பானந்தா சோனோவால் கூறினார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu