கேரளாவில் அரசு பேருந்துகள், கனரக வாகனங்களில் சீட் பெல்ட் கட்டாயம்

கேரளாவில் அரசு பேருந்துகள், கனரக வாகனங்களில் சீட் பெல்ட் கட்டாயம்
X

கேரளாவில் பேருந்துகளில் சீட் பெல்ட் அணிவது கட்டாயம்

கேரளாவில் செப்டம்பர் மாதம் முதல் அரசு பேருந்துகள் கனரக வாகனங்களில் சீட் பெல்ட் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது

கேரள போக்குவரத்து துறை அமைச்சர் ஆண்டனி ராஜூ தலைமையில் திருவனந்தபுரத்தில் உயர்மட்ட ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் கூறியதாவது:

மத்திய அரசின் போக்குவரத்து சட்ட விதிகளின் படி வாகனங்களில் சீட் பெல்ட் அணிவது கட்டாயமாகும். அதன்படி கேரளாவில் இலகுரக வாகனங்களில் ஓட்டுனர்கள் சீட் பெல்ட் அணிவது கட்டாயமாக்கப்பட்டு முறையாக கண்காணிக்கப்பட்டு வருகிறது.

மேலும், அனைத்து வாகன ஓட்டிகளும் போக்குவரத்து விதிகளை முழுமையாக கடைப்பிடிக்கும் வகையில் சீர்திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது. இதை கண்காணிக்க மாநிலம் முழுவதும் செயற்கை நுண்ணறிவு கேமராக்கள் அமைக்கப்பட்டுள்ளது. ஆனால், பேருந்துகள் உள்பட கனரக வாகனங்களில் சீட் பெல்ட் அணிய இதுவரை சலுகை அளிக்கப்பட்டு வந்தது.

இந்தநிலையில் வருகிற செப்டம்பர் மாதம் முதல் கேரள அரசு பேருந்து உட்பட கனரக வாகனங்களில் சீட் பெல்ட் கட்டாயமாக்கப்பட்டு உள்ளது. எனவே, சரக்கு லாரிகள் உட்பட அனைத்து வாகனங்களிலும் ஓட்டுநர் மற்றும் முன் இருக்கையில் அமரும் பயணியோ, நடத்துநரோ, உதவியாளரோ கண்டிப்பாக சீட் பெல்ட் அணிவது கட்டாயமாக்கப்பட்டு உள்ளது.

இந்த உத்தரவு செப்டம்பர் 1-ந் தேதி முதல் அமலுக்கு வருகிறது. பேருந்து உட்பட கனரக வாகனங்களில் சீட் பெல்ட் அமைப்பதற்காக செப்டம்பர் வரை கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது என்று கூறினார்.

இந்த உத்தரவைத் தொடர்ந்து தமிழ்நாடு உட்பட மற்ற மாநிலங்களில் இருந்து கேரளா செல்லும் அரசு பேருந்து உட்பட அனைத்து வாகனங்களுக்கும் சீட் பெல்ட் கட்டாயமாக்கப்பட்டு உள்ளது. இதனை மீறுவோர் மீது ரூ.2 ஆயிரம் அபராதம் விதிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story
தினம் 1 ! வேகவைத்த முட்டை சாப்பிட்டால் உடம்புக்கு அவ்வளவு சத்துக்கள்  கிடைக்கும் ... வேறென்ன வேணும்...! | Egg benefits in tamil