காவிரி மேலாண்மை ஆணைய உத்தரவுகளை அமல்படுத்த உச்சநீதிமன்றம் உத்தரவு

காவிரி மேலாண்மை ஆணைய உத்தரவுகளை அமல்படுத்த  உச்சநீதிமன்றம் உத்தரவு
X

பைல் படம்.

காவிரி மேலாண்மை ஆணையம் மற்றும் ஒழுங்காற்று குழு உத்தரவுகளை அமல்படுத்த வேண்டும் என்று கர்நாடக அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

காவிரியில் தமிழ்நாட்டுக்கு உரிய நீரை திறக்க கர்நாடக அரசுக்கு உத்தரவிடக்கோரி, தமிழ்நாடு அரசு தாக்கல் செய்த மனு உச்சநீதிமன்றத்தில்இன்று விசாரணைக்கு வந்தது. நீதிபதிகள் பி.ஆர். கவாய், பி.எஸ். நரசிம்மா, பி.கே.மிஸ்ரா ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த மனுக்களை விசாரித்தனர்.

அப்போது 15,000 கன அடியில் இருந்து 5,000 கனஅடி வரை தொடர்ந்து தண்ணீரின் அளவை கர்நாடகா குறைத்து வருகிறது. மழை பற்றாக்குறை இருப்பதை ஒத்துக்கொள்கிறோம், அதற்காக இருக்கும் நீரைக்கூட தர மறுத்தால் எப்படி? என தமிழ்நாடு அரசு சார்பில் வாதிடப்பட்டது.

இதையடுத்து காவரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவுபடியே தண்ணீர் திறக்கப்பட்டுவதாகவும் தமிழ்நாட்டிற்கு 2,500 கனஅடி நீர் மட்டுமே திறக்க முடியும் என்று கர்நாடகா தரப்பில் வாதிடப்பட்டது.

அதனை தொடர்ந்து வினாடிக்கு 12,500 கனஅடி வீதம் தண்ணீர் திறக்க உத்தரவிட வேண்டும்; குறைவான மழை பெய்யும் காலங்களில் உச்சநீதிமன்றம் வரையறுத்துள்ள அளவு தண்ணீரை வழங்க வேண்டும் என தமிழ்நாடு அரசு சார்பில் முறையிடப்பட்டது.

இறுதியில், காவிரி விவகாரத்தில் காவிரி மேலாண்மை ஆணையம் மற்றும் ஒழுங்காற்று குழு உத்தரவுகளை அமல்படுத்த வேண்டும் என்று கர்நாடக அரசுக்கு உச்சநீதிமன்றம் நீதிபதிகள் உத்தரவிட்டனர். காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவுகளை ஏற்க முடியாது என கர்நாடக அரசு கூறுவது தவறு என்று கூறிய நீதிபதிகள், காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவுகளுக்கு தடை விதிக்க வேண்டும் என்ற கர்நாடக அரசின் கோரிக்கையை நிராகரித்தனர்.

CWMA மற்றும் காவிரி நீர் முறைப்படுத்தும் குழு போன்ற நிபுணர் அமைப்புகள் வறட்சி மற்றும் பற்றாக்குறை மழை போன்ற அனைத்து தொடர்புடைய அம்சங்களையும் பரிசீலித்து உத்தரவை நிறைவேற்றியுள்ளன, எனவே, கர்நாடகா 5,000 கனஅடி நீர் திறக்க உத்தரவிடுவதில் தலையிட விரும்பவில்லை என்று கூறியது

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!