லக்கிம்பூர் வன்முறை: விரிவான அறிக்கை சமர்பிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு
லக்கிம்பூர் வன்முறையில் எரியும் வாகனம்
உத்தரப்பிரதேசத்தில் நடைபெற்ற விவசாயிகளின் போராட்டத்தில் நிகழ்த்தப்பட்ட வன்முறையின் போது மத்திய அமைச்சர் அஜய் மிஸ்ராவின் வாகனம் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்களின் ஊடே புகுந்து 8 பேரை பலி வாங்கியதாக அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என போராட்டம் நடைபெற்று வருகிறது.
இந்த விவகாரத்தை உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து (சூமோட்டோ) விசாரணைக்கு எடுத்தது.இந்த வழக்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்வி ரமணா, நீதிபதிகள் சூர்ய காந்த், ஹிமா கோலி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், லக்கிம்பூர் கேரி வன்முறை துரதிருஷ்டவசமானது. பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடியாக மருத்துவச் சிகிச்சையை உறுதி செய்ய வேண்டும் என அரசுக்கு உத்தரவிட்டது.
மேலும், இக்கலவர வழக்கில் யார் யாரை கைது செய்துள்ளீர்கள், யார் மீதெல்லாம் வழக்கு பதியப்பட்டது, வழக்கின் விசாரணை எந்த நிலையில் உள்ளது என்பது குறித்து விரிவான அறிக்கையை தாக்கல் செய்யுமாறு உத்தரப் பிரதேச அரசுக்கு உத்தரவிட்டுள்ள உச்ச நீதிமன்றம், வழக்கு விசாரணையை வெள்ளிக்கிழமைக்கு ஒத்தி வைத்தது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu