கற்றல் குறைபாடுள்ள மாணவருக்கு டிகிரி வழங்க உச்சநீதிமன்றம் உத்தரவு
ஐஐடி மும்பை
மும்பையை சேர்ந்த நமன் வர்மா என்பவர் 'டிஸ்கால்குலியா" என்ற கற்றல் குறைபாட்டால் பாதிக்கப்பட்டவர். இவர் மும்பை ஐ.ஐ.டியில் முதுநிலை டிசைன் பாடத்தில் சேர்வதற்காக கடந்த 2013-ஆம் ஆண்டு விண்ணப்பித்தார். ஆனால் இவரது உடல்நிலை காரணமாக விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது.
இதையடுத்து இவர் மும்பை உயர்நீதிமன்றத்தில், அவரை ஐஐடியில் சேர்த்துகொள்ள சட்டப்பிரிவு 226 பிரிவின் கீழ் நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என மனு ஒன்றை அளித்தார்.
இதையடுத்து உயர்நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் நமன் வர்மா மும்பை ஐ.ஐ.டியில் டிசைன் பாடத்தில் சேர்த்துக்கொள்ளப்பட்டார். கடந்த 2018-ஆம் ஆண்டு அவர் தனது படிப்பை வெற்றிகரமாக முடித்துவிட்டாலும், அவருக்கு பட்டம் வழங்குவதற்கு நீதிமன்றத்தால் உத்தரவிடமுடியாது என மறுத்துவிட்டது.
இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், சட்டப்பிரிவு 142-ன் கீழ் நமன் வர்மா பட்டம் பெறுவதற்கு தகுதியான நபர் என்றும், இன்னும் 4 வாரத்தில் அவருக்கு பட்டம் வழங்கப்பட வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளது.
இந்த தீர்ப்பு கற்றல் குறைபாடு உள்ள நபர்கள் கல்லூரியில் பயில்வதற்கு பெரும் உதவியாக இருக்கும் என கூறப்படுகிறது.
டிஸ்கால்குலியா என்பது கணிதத்தில் எண்களை புரிந்துகொள்வதில் சிக்கல், கணித சிக்கல்களைத் தீர்க்க கணிதக் கொள்கைகளைப் பயன்படுத்துவதில் உள்ள சிரமங்கள் போன்ற குறைபாடாகும்
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu