ஓய்வு பெற்ற மறுநாளே தேர்தல் ஆணையராக நியமனம்: அறிக்கை கேட்ட உச்சநீதிமன்றம்

ஓய்வு பெற்ற மறுநாளே தேர்தல் ஆணையராக நியமனம்: அறிக்கை கேட்ட உச்சநீதிமன்றம்
X
மத்திய அரசில் செயலாளராக பணியாற்றி வந்த அருண் கோயல் பணியில் இருந்து விருப்பு ஓய்வு பெற்ற மறுநாள் தேர்தல் ஆணையராக நியமனம் செய்யப்பட்டார்

மத்திய அரசின் கனரக தொழில்துறை அமைச்சகத்தின் செயலாளராக 1985 பஞ்சாப் பிரிவு ஐஏஎஸ் அதிகாரி அருண் கோயல் பணியாற்றி வந்தார். இவர் கடந்த 37 ஆண்டுகளாக மத்திய அரசில் பணியாற்றி வருகிறார். 60 வயதான அருண் கோயலின் பதவி காலம் வரும் டிசம்பர் 31-ம் தேதியுடன் முடிவடைகிறது.

இதனிடையே, அவருடைய பதவிகாலம் நிறைவடைவதற்கு முன் அருண் கோயல் கடந்த 19-ம் தேதி கனரக தொழில்துறை அமைச்சகத்தின் செயலாளர் பதவியில் இருந்து விருப்ப ஓய்வு பெற்றார்.

வெள்ளிக்கிழமை விருப்ப ஓய்வு பெற்ற நிலையில் சனிக்கிழமை அருண் கோயலை இந்திய தேர்தல் ஆணையராக மத்திய அரசு நியமித்தது. இந்த நியமன ஒப்புதலை குடியரசுத்தலைவர் தி-ரௌபதி முர்மு அளித்தார். இதனை தொடர்ந்து கடந்த திங்கங்கிழமை இந்திய தேர்தல் ஆணையராக அருண் கோயல் பொறுப்பேற்றுக்கொண்டார்.

இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் தலைமையிலான 3 பேர் கொண்ட தேர்தல் ஆணையர்கள் குழுவின் அருண் கோயல் இடம்பெற்றுள்ளார். தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார், தேர்தல் ஆணையர் அனுப் சந்திரா இடம்பெற்றுள்ள குழுவில் 3-வது நபராக அருண் கோயல் இடம்பெற்றுள்ளார்.

இந்நிலையில், மத்திய அரசு பணியில் இருந்து விருப்ப ஓய்வு பெற்ற மறுநாளே அருண் கோயல் இந்திய தேர்தல் ஆணையராக நியமிக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. உச்சநீதிமன்ற நீதிபதி கேஎம் ஜோசப் தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அமர்வில் விசாரணை நடைபெற்று வருகிறது.

நீதிபதி கே.எம். ஜோசப் தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு, தேர்தல் ஆணையராக கோயலுக்கு சமீபத்தில் தான் விருப்ப ஓய்வு அளிக்கப்பட்டதால், அவரை நியமித்ததில் ஏதேனும் குளறுபடி உள்ளதா என்பதை அறிய விரும்புவதாக கூறியது.

இந்த விவகாரத்தில் மத்திய அரசு பணியில் இருந்து விருப்ப ஓய்வு பெற்ற அருண் கோயல் இந்திய தேர்தல் ஆணையராக நியமிக்கப்பட்டது எவ்வாறு? நியமன நடைமுறைகள் எவ்வாறு பின்பற்றப்பட்டன? என கேள்வி எழுப்பிய உச்சநீதிமன்றம், தேர்தல் ஆணையராக அருண் கோயல் நியமனம் செய்யப்பட்ட நியமன ஆணை உள்ளிட்டவற்றை அறிக்கையாக தாக்கல் செய்யும்படி மத்திய அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.

விசாரணை நடந்து கொண்டிருக்கும் போதே கோயலின் நியமனம் தொடர்பான கோப்பைப் பார்க்க நீதிமன்றத்தில் தயாராக உள்ளது என்று கூறியதற்கு அட்டர்னி ஜெனரல் ஆர்.வெங்கடரமணியின் ஆட்சேபனைகளை பெஞ்ச் நிராகரித்தது

தேர்தல் ஆணையம் மற்றும் தலைமை தேர்தல் ஆணையர் (சிஇசி) நியமனம் தொடர்பான பெரிய பிரச்சினையை நீதிமன்றம் கையாள்கிறது என்றும், வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் தொடுத்த தனிப்பட்ட வழக்கை பார்க்க முடியாது என்றும் வெங்கடரமணி கூறினார்.

இந்த வழக்கை கடந்த வியாழன் அன்று விசாரிக்கத் தொடங்கியதாகவும், அதன்பிறகு நவம்பர் 19 ஆம் தேதி கோயலின் நியமனம் நடைமுறைக்கு வந்ததாகவும், எனவே, இந்த நடவடிக்கைக்கு என்ன காரணம் என்று பார்க்க விரும்புவதாகவும் பெஞ்ச் கூறியது.

இதனை தொடர்ந்து இந்த வழக்கு வரும் செவ்வாய்க்கிழமை மீண்டும் விசாரணைக்கு வரும் என்று தெரிவித்து இன்று வழக்கை ஒத்திவைத்தது.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!