நிரந்தர வைப்புத் தொகைகளுக்கான வட்டியை உயர்த்திய எஸ்பிஐ
பாரத ஸ்டேட் வங்கி
இந்தியாவின் மிகப்பெரிய வங்கியான பாரத ஸ்டேட் வங்கி (எஸ்பிஐ) ரூ. 2 கோடிக்கும் குறைவான நிரந்தர வைப்புத் தொகைகளுக்கான வட்டியை உயர்த்தியிருக்கிறது.
உயர்த்தப்பட்ட வட்டி விகிதங்கள் தொடர்பான விவரங்கள் அனைத்தம் எஸ்பிஐ வங்கியின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இது 2023ஆம் ஆண்டு டிசம்பர் 27ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கூடுதலாக, ரூ.2 கோடிக்கும் அதிகமான வைப்புத் தொகைகளுக்கான நிரந்தர வைப்பு விகிதங்களையும் பாரத ஸ்டேட் வங்கி மாற்றியமைத்துள்ளது.
அதன்படி, ஏழு நாள்கள் முதல் 45 நாள்கள் வரையிலான முதிர்வுகளைக் கொண்ட வைப்புகளுக்கு 50 காசுகள் வட்டி உயர்த்தப்பட்டு, 3 சதவீதத்திலிருந்து 3.50 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது.
அதுபோல 46 நாள்கள் முதல் 179 வரையிலான வைப்புகளுக்கான வட்டி 25 காசுகள் உயர்த்தப்பட்டு, தற்போது 4.75 சதவீதமாக உயர்ந்துள்ளது.
180 நாள்கள் முதல் 120 நாள்கள் வரையிலான வைப்புகளுக்கான வட்டி விகிதம் 5.25 சதவீதத்திலிருந்து 5.75 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது.
211 நாள்கள் முதல் 1 ஆண்டுக்கும் குறைவான வைப்புகளுக்கு வட்டி விகிதம் 5.75 சதவீதத்திலிருந்து 6 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது.
மூன்று ஆண்டுகள் முதல் ஐந்து ஆண்டுகளுக்குள் இருக்கும் வைப்புகளுக்கான வட்டி 6.75 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது.
மற்ற வைப்புகளுக்கான வட்டி விகிதங்கள் மாற்றமின்றி நீடிக்கின்றன.
ஏழு நாள்கள் முதல் 45 நாள்கள் வரையிலான முதிர்வுகளைக் கொண்ட வைப்புகளுக்கு 50 காசுகள் வட்டி உயர்த்தப்பட்டு, 3 சதவீதத்திலிருந்து 3.50 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது.
கடந்த வாரம், குறிப்பிட்ட பருவகால கடன்களுக்கான வட்டி விகிதங்களை எஸ்பிஐ உயா்த்தியிருந்தது. இது குறித்து வங்கி வெளியிட்டிருந்த அறிக்கையில், குறிப்பிட்ட பருவ காலங்களைக் கொண்ட எம்சிஎல்ஆா் வகை கடன்களுக்கான வட்டி விகிதங்கள் 5 முதல் 10 அடிப்படை புள்ளிகள் வரை உயா்த்தப்படுகின்றன.
இதையடுத்து, அந்த வகைக் கடன்களுக்கான வட்டி விகிதங்கள் இனி 8 முதல் 8.85 சதவீதம் வரை இருக்கும். டிச. 15 முதல் இந்த வட்டி விகித உயா்வு அமலுக்கு வந்துள்ளது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
எம்சிஎல்ஆா் வகை கடன்களுக்கான வட்டி விகிதங்கள் உயா்த்தப்பட்டுள்ளதால், வீட்டுக் கடன்கள், கார் கடன்கள், தனி நபா் கடன்கள் ஆகியவற்றுக்கான மாதாந்திர தவணைகள் மிதமாக அதிகரிக்கும்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu