லீவு நாட்களிலும் சம்பளம் மற்றும் பென்சன் பெறலாம்- ரிசர்வ் வங்கி அறிவிப்பு
ரிசர்வ் வங்கி
சம்பளம், ஓய்வூதியம் போன்றவற்றை வார இறுதி நாட்களிலும் பெற்றுக்கொள்ளும் வசதி இன்று முதல் அமலுக்கு வருகிறது. இதுபோலவே இஎம்ஐ போன்றவையும் வார இறுதி நாட்களில் செலுத்தும் வசதி வழங்கப்படுகிறது.
அரசு மற்றும் அரசு சாரா நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களுக்கு சம்பளம் அவர்களது வங்கி கணக்குகளில் வரவு வைக்கப்படுகிறது. மொத்தமாக ஊழியர்களுக்கு வழங்கப்படும் சம்பளத்திற்கான மொத்த தொகை என்ஏசிஹெச் எனப்படும் தேசிய பணம் செலுத்தும் கார்பரேஷன் வழியாகவே வழங்கப்படுகிறது.
வார இறுதி நாட்களில் விடுமுறை என்பதால் அடுத்த வேலை நாட்களில் மட்டுமே கிளியரன்ஸ் வசதி தற்போது உள்ளது. இது அனைத்த நாட்களிலும் செயல்படும் என மத்திய ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்ததாஸ் ஏற்கெனவே அறிவித்தார். இந்த வசதி ஆகஸ்ட் 1-ம் தேதி முதல் அமலுக்கு வரும் எனவும் அறிவித்தார்.
அதன்படி, சம்பளம், ஓய்வூதியம் மற்றும் ஈ.எம்.ஐ கட்டணங்கள் போன்ற முக்கியமான பரிவர்த்தனைகளை மேற்கொள்ள இனிமேல் வார வேலை நாட்களில் காத்திருக்க வேண்டிய அவசியமில்லை.
ரிசர்வ் வங்கியின் இந்த மாற்றங்கள் இன்று முதல் (ஆகஸ்ட் 1, 2021) நடைமுறைக்கு வரவுள்ளன. இனி எல்லா நாட்களும் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகள் காத்திருக்க வேண்டிய அவசியமில்லை. சம்பளம் அல்லது ஓய்வூதிய சேவைகள் இனி வாரத்தின் அனைத்து நாட்களிலும் கிடைக்கும்.
சம்பளம் மட்டும் அல்லாமல் வங்கிக்கு செலுத்த வேண்டிய இஎம்ஐ போன்றவற்றையும் குறிப்பிட்ட அந்த நாட்களில், வார இறுதி நாட்களாக இருந்தாலும் செலுத்த முடியும். பங்குகளுக்கான டிவிடெண்ட்டையும் இனி முன்னதாக பெறலாம்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu