/* */

சபரிமலையில் கூடுதல் பாதுகாப்பு.. தீவிர சோதனைக்குப் பிறகே பக்தர்கள் அனுமதி..

சபரிமலையில் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ள நிலையில், முழுமையான சோதனைக்குப் பிறகே பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.

HIGHLIGHTS

சபரிமலையில் கூடுதல் பாதுகாப்பு.. தீவிர சோதனைக்குப் பிறகே பக்தர்கள் அனுமதி..
X

சபரிமலையில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு.

கேரள மாநிலம், பத்தினம் திட்டா மாவட்டத்தில், மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் அமைந்துள்ள சபரிமலை அய்யப்பன் கோயிலுக்கு உலகம் முழுவதும் இருந்து பக்தர்கள் விரதம் இருந்து இருமுடி கட்டி சென்று வருவது வழக்கம். மலையாள மாதத்தில் முதல் 5 நாட்கள் இந்தக் கோயிலில் நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடத்தப்படுவது உண்டு.

மேலும், மகரவிளக்கு பூஜையை முன்னிட்டு, கார்த்திகை, மார்கழி, தை மாதங்களில் பக்தர்களின் வசதிக்காக நாள் முழுவதும் நடை திறந்து இருக்கும். தமிழகத்தில் இருந்து கோடிக்கணக்கான பக்தர்கள் சபரிமலை அய்யப்பன் கோயிலுக்கு சென்று வருகின்றனர். இந்த நிலையில் நடப்பு ஆண்டு மண்டல பூஜைக்காக சபரிமலை கோயிலில் கடந்த மாதம் 16 ஆம் தேதி நடை திறக்கப்பட்டது.

தொடர்ந்து, 17ஆம் தேதி முதல் பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டு வருகிறது. நாள்தோறும் ஒரு லட்சம் பக்தர்கள் வரை தரிசனம் செய்து வருகின்றனர். கொரோனா பெருந்தொற்று காலங்களில் சபரிமலை கோயிலுக்கு பக்தர்கள் அனுமதி இல்லை என்ற நிலையில் தற்போது கூட்டம் அதிகளவு காணப்படுகிறது.

இதற்கிடையே, கோயிலில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட 5 போலீஸாருக்கும் சின்னம்மை பாதிப்பு இருப்பது சமீபத்தில் உறுதிப்படுத்தப்பட்டது. இதனால், சபரிமலைக்கு வரும் பக்தர்கள் மற்றும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள போலீஸார் உள்ளிட்டோர் கட்டாயமாக முகக் கவசம் அணிந்து கொள்ள வேண்டும் என கேரள சுகாதாரத் துறையில் சார்பாக வேண்டுகோள் விடுக்கப்பட்டு உள்ளது.

பலத்த பாதுகாப்பு:

இதற்கிடையே, டிசம்பர் 6 ஆம் தேதி பாபர் மசூதி இடிப்பு தினம் என்பதால் சபரிமலை முழுவதும் பாதுகாப்பு கடுமையாக்கப்பட்டு உள்ளது. பம்பை முதல் சன்னிதானம் வரை போலீஸார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.

துப்பாக்கி ஏந்திய என்.டி.ஆர்.ஐ.எப், தண்டர்போல்ட் பாதுகாப்பு வீரர்களும் பாதுகாப்பில் ஈடுபட்டு உள்ளனர். முக்கியமான 74 இடங்களில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு முழுமையாக கண்காணிக்கப்படுகிறது. அனைத்து பக்தர்களும் முழு பரிசோதனைக்கு பின்னரே சன்னிதானத்தில் அனுமதிக்கப் படுகிறார்கள்.

மெட்டல் டிடெக்டர் வைத்துள்ள வாசல் வழியாக மட்டுமே பக்தர்கள் செல்ல முடியும். பக்தர்கள் கொண்டு வரும் இருமூடி மற்றும் பைகள் ஸ்கேன் செய்த பின்னரே அனுமதிக்கப்படுகின்றன. செல்போன் உள்ளிட்ட எந்தவித எலக்ட்ரானிக் பொருட்களும் சன்னிதான திருமுற்றத்தில் பயன்படுத்தக் கூடாது.

பக்தர்கள் மட்டுமல்ல அனைத்து ஊழியர்களும் பரிசோதனைக்கு உட்படுத்தப்படுகின்றனர். சபரிமலை சன்னிதானத்தின் பல்வேறு பகுதிகளிலும், வனப் பகுதிகளிலும் பாதுகாப்பை பலப்படுத்தும் வகையில் பல்வேறு படைகள் இணைந்து சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

கேரள போலீஸ் கமாண்டோக்கள், விரைவு அதிரடிப்படை, என்டிஆர்எப், வனத்துறை மற்றும் வெடிகுண்டு கண்டறிதல் படை தலைமையில் சோதனை நடைபெற்று வருகிறது. சரங்கொத்தி, மரக்கூட்டம், பைலிபாலம், அன்னதான மண்டபம், உரல்குழி, பண்டிதாவலம் வழியாக சன்னிதானம் வரை கூடுதல் கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

பாதுகாப்பு பலப்படுத்துதலின் ஒரு பகுதியாக 100 பணியாளர்கள் கொண்ட புதிய குழு சன்னிதான பாதுகாப்பு தனி அலுவலர் ஹரிச்சந்திர நாயக்கிற்கு அறிக்கை அளித்தது. அதன் அடிப்படையில், மெட்டல் டிடெக்டர்கள் மற்றும் வெடிகுண்டுகளை கண்டறியும் கருவிகள் மட்டுமின்றி வான்வழி கண்காணிப்பு மற்றும் சிறிய ரக ஆளில்லா விமானம் மூலம் கண்காணிப்பு பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன.

Updated On: 7 Dec 2022 4:40 AM GMT

Related News

Latest News

  1. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை மாவட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் ஓ ஆர் எஸ் கரைசல்...
  2. திருவண்ணாமலை
    வேளாண் கல்லூரி மாணவிகளுடன் கலந்துரையாடிய மாவட்ட கலெக்டர்
  3. ஈரோடு
    அந்தியூர் அருகே மாநில எல்லையில் 2 பேரிடம் ரூ.1.50 லட்சம் பறிமுதல்
  4. லைஃப்ஸ்டைல்
    ‘தனியே ... தன்னந்தனியே ...’ - வாழ்க்கையை தைரியமாக எதிர்கொள்ளுங்கள்!
  5. லைஃப்ஸ்டைல்
    நான் பாடும் மௌன ராகம் கேட்கவில்லையா? - ஒரு பக்க காதல் மேற்கோள்கள்...
  6. லைஃப்ஸ்டைல்
    ‘பூக்கள் பூக்கும் தருணம் ஆருயிரே... பார்த்ததாரும் இல்லையே!’ - தமிழில்...
  7. லைஃப்ஸ்டைல்
    எண்ணெய் குளியலில் இவ்வளவு விஷயங்கள் இருக்குதா?
  8. லைஃப்ஸ்டைல்
    என்னை ஈன்றவளுக்கு இன்று பிறந்தநாள்..!
  9. தொழில்நுட்பம்
    POCO X6 Neo: விலையால் அசத்தும் ஃபோன்!
  10. லைஃப்ஸ்டைல்
    ஒற்றை வரியில் வெற்றி மொழிகள்..!