மண்டல சீசனில் 200 கோடியை தாண்டிய சபரிமலை வருவாய்

மண்டல சீசனில் 200 கோடியை தாண்டிய சபரிமலை வருவாய்
X

சபரிமலை ஐயப்பன் 

39 நாள்களில் (டிச.25 வரை) ரூ.200 கோடி வருவாய் ஈட்டப்பட்டதாக தேவஸ்தானத்தின் தலைவர் பி.எஸ்.பிரசாத் தெரிவித்துள்ளார்

சபரிமலையில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. மண்டல மற்றும் மகர பூஜைகள் நடைபெறும் இந்த மண்டல காலத்தில் பருவத்தில், சபரிமலை கோயிலின் வருவாயை திருவாங்கூர் தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

இந்தப் பருவம் தொடங்கிய 39 நாள்களில் (டிச.25 வரை) ரூ.200 கோடி வருவாய் ஈட்டப்பட்டதாக தேவஸ்தானத்தின் தலைவர் பி.எஸ்.பிரசாத் தெரிவித்துள்ளார்.

காணிக்கையாக அளிக்கப்பட்ட நாணயங்கள் எண்ணப்படும்போது இந்த மதிப்பு இன்னும் அதிகரிக்கும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

மொத்த வருவாயான ரூ. 204.30 கோடியில் ரூ.63.89 கோடி பக்தர்களால் காணிக்கையாக அளிக்கப்பட்டது. அரவணை பாயாசம் விற்பனையின் மூலம் ரூ.96.32 கோடியும் அப்பம் விற்பனையின் மூலம் ரூ.12.38 கோடியும் ஈட்டப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.

இந்த முறை மண்டல காலத்தில் 31 லட்சத்துக்கும் அதிகமான பக்தர்கள் ஐயப்பனைத் தரிசிக்க வந்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

நெருக்கடியான பக்தர்கள் கூட்டம் இருந்தபோதும் தேவஸ்தானம் அதன் வரையறைக்குட்பட்டு அவர்களுக்கு வேண்டிய வசதிகளை ஏற்படுத்தியதாக பிரசாத் தெரிவித்துள்ளார்.

மண்டல பூஜைக்குப் பின்னர் கோயில், நாளைபுதன்கிழமை இரவு 11 மணியோடு மூடப்படவுள்ளது. அதன் பிறகு டிச.30 மகரவிளக்கு பூஜைக்காகத் திறக்கப்படும். ஜன. 15 சபரிமலையில் மகரவிளக்கு பூஜை நடைபெறவுள்ளது.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!