Sabarimala Ayyappan Temple- சபரிமலையில் குளறுபடியான ஏற்பாடுகளை செய்த தேவசம்போர்டு; அய்யப்ப பக்தர்கள் குற்றச்சாட்டு

Sabarimala Ayyappan Temple- சபரிமலையில் குளறுபடியான ஏற்பாடுகளை செய்த தேவசம்போர்டு; அய்யப்ப பக்தர்கள் குற்றச்சாட்டு
X

Sabarimala Ayyappan Temple- சபரிமலையில் திரண்டிருக்கும் பக்தர் கூட்டத்தின் ஒரு பகுதி 

Sabarimala Ayyappan Temple- முன் எப்போதும் இல்லாத அளவுக்கு இந்தமுறை, பல்வேறு நெருக்கடிகள், சிரமங்களை அய்யப்ப பக்தர்கள் சந்திப்பதாகவும், இதற்கு தேவசம்போர்டின் குளறுபடியான ஏற்பாடுகளே காரணம் என்றும் புகார் எழுந்துள்ளது.

Sabarimala Ayyappan Temple,Devasombord Disorders- சபரிமலையில் ஆன்லைன் முன்பதிவு மூலம் பக்தர்கள் அனுமதிக்கப்படுகின்றனர். ஒரு நாளில் எத்தனை பக்தர்களை தரிசனத்துக்கு அனுமதிக்க முடியும் என்ற கணக்கு கூட சரியாக வைத்திராத திருவிதாங்கூர் தேவசம் போர்டு, ஒரு லட்சம் பக்தர்களை தினமும் முன்பதிவு செய்ய அனுமதித்தது. அதன் பலனை அப்பாவி அய்யப்ப பக்தர்கள் அனுபவித்துக் கொண்டிருக்கின்றனர். இம்மாத துவக்கத்தில் இது போன்ற பிரச்னை ஏற்பட்டபோது, ஆளும் மார்க்சிஸ்ட் அரசு மீது கடும் விமர்சனம் எழுந்தது.


அதன் பின் நிலைமை ஓரளவு சீரான நிலையில், கடந்த ஒரு வாரமாக மீண்டும் பக்தர்கள் பெரும் இன்னல்களை சந்திக்கின்றனர். எருமேலிக்கு முன்பும், எருமேலியிலிருந்து நிலக்கல் வரையிலும் பக்தர்களின் வாகனங்கள் ஆங்காங்கே தடுத்து நிறுத்தப்படுகின்றன.

இங்கு பல மணி நேரம் காத்து கிடந்த பின் தான் வாகனங்கள் நிலக்கல் செல்ல அனுமதிக்கப்படுகின்றன. இதனால் நேற்றும், நேற்று முன் தினமும் எருமேலியில் பல்வேறு இடங்களில் பக்தர்கள் மறியலில் ஈடுபட்டனர்.

16 மணி நேரம் தரிசனம்

மூன்றரை மணி நேரத்துக்கு மேலாக வாகனங்களை தடுத்து நிறுத்தியதால், பக்தர்கள் கோபமடைந்து போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இவ்வாறு சிரமங்களை சந்தித்த பின், பம்பையில் மீண்டும் ஒரு மணி நேரம் காத்திருந்து அங்கிருந்து மலை ஏறும் போது, அப்பாச்சி மேடு முதல் சரங்குத்தி வரை 10க்கும் மேற்பட்ட ஷெட்டுகளில், பக்தர்களை கூட்டம் கூட்டமாக அடைத்து பல மணி நேரம் காக்க வைக்கின்றனர்.


அப்பாச்சி மேட்டில் செங்குத்தான இறக்கத்தில் பக்தர்களை பல மணி நேரம் நிற்க வைப்பதால் கால் வலியால் அவதிப்படுகின்றனர். எந்த ஆண்டும் இல்லாத அளவு, இந்தாண்டு பக்தர்களை இவ்வாறு சிரமப்படுத்தும் செயலுக்கு கண்டனங்கள் எழுந்துள்ளன. பம் பையில் இருந்து சன்னிதானம் வந்து 18 படிகளில் ஏறி, அய்யப்பனை தரிசிக்க 12 - 16 மணி நேரம் வரை கால் கடுக்க கியூவில் நிற்க வேண்டியுள்ளது.

அமைச்சர் விளக்கம்

தேவசம் போர்டு அமைச்சர் ராதாகிருஷ்ணன் கூறுகையில், ''விபத்து ஏற்படாமல் தடுக்கத் தான், சில இடங்களில் வாகனங்கள் தடுத்து நிறுத்தப்படுகின்றன. தடுத்து நிறுத்தப்படும் இடங்களில் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்படுகிறது,'' என்றார்.

ஆனால் பஸ்கள் நிற்கும் இடத்தில் அப்படிப்பட்ட எந்த வசதியும் செய்யப்படவில்லை என்று பக்தர்கள் கூறுகின்றனர்.

ஆனால், தேவசம்போர்டு எந்த கருத்தும் கூறாமல் வருமானத்தை அதிகரிப்பதில் மட்டுமே குறியாக உள்ளது. போலீசாருக்கும், தேவசம் போர்டுக்கும் இடையே உள்ள பனிப்போர் தான், இவ்வளவு பிரச்னைக்கும் காரணம் என, சன்னிதானத்தில் நீண்ட காலமாக சேவை செய்யும் சில பக்தர்கள் கூறுகின்றனர்

தங்க அங்கி இன்று அய்யப்ப சுவாமிக்கு அணிவிப்பு

கடந்த 23-ல் ஆரன்முளா பார்த்தசாரதி கோவிலில் இருந்து புறப்பட்ட தங்க அங்கி பவனி இன்று மாலை சன்னிதானம் வந்தடையும். அந்த அங்கியை தந்திரி மகேஷ் மோகனரரு, மேல் சாந்தி மகேஷ் நம்பூதிரி பெற்று, அய்யப்பன் விக்கிரகத்தில் அணிவித்து தீபாராதனை நடைபெறும். நிறைவாக, நாளை காலை 10:30 முதல், 11:30க்குள் மண்டல பூஜை நடைபெறும். நாளை இரவு 10:00 மணிக்கு நடை அடைக்கப்பட்டு, இந்த ஆண்டுக்கான மண்டல காலம் நிறைவு பெறும். பின், வரும் 30ல் திறக்கப்படும் நடை, ஜனவரி 20 வரை திறந்திருக்கும்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!