உக்ரைனில் ரஷ்யா குண்டு வீச்சு: கர்நாடகாவை சேர்ந்த இந்திய மாணவர் பலி

உக்ரைனில் ரஷ்யா குண்டு வீச்சு: கர்நாடகாவை சேர்ந்த இந்திய மாணவர் பலி
X

உக்ரைன் மீது போர் தொடுத்த ரஷ்யா கடந்த 6 நாட்களாக தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த யுத்தத்தில் அப்பாவி பொதுமக்கள் பலர் கொல்லப்பட்டு வருகின்றனர். இன்று உக்ரைனின் 2-வது பெரிய நகரமான கார்கிவ் நகரில் ரயில் நிலையம் செல்ல முயன்ற இந்திய மாணவர் நவீன் சேகரப்பா, ரஷ்யா ராணுவத்தின் குண்டு வீச்சு தாக்குதலில் உயிரிழந்துள்ளார். இதனை மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் உறுதி செய்துள்ளது. ரஷ்யாவின் தாக்குதலில் உயிரிழந்த நவீன் சேகரப்பா, கர்நாடகா மாநிலம் ஹாவேரி மாவட்டத்தைச் சேர்ந்தவர் எனவும் வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Tags

Next Story