விபத்தில் சிக்கியவர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதிப்போருக்கு வெகுமதி
நாட்டில் வாகனங்களின் பெருக்கத்திற்கேற்ப சாலை வசதிகளை விரிவுபடுத்த வேண்டிய தேவை தற்போதும் பல இடங்களில் ஏற்பட்டுள்ளது. வாகன பெருக்கத்தால் அன்றாடம் விபத்துகள் தவிர்க்க முடியாத ஒன்றாக உள்ளது வேதனையான செய்தி.
அதில் பெரும்பாலான விபத்துகள் இருசக்கர வாகனத்தால்தான் நிகழ்வதாக ஆய்வு ஒன்று கூறுகிறது. அடுத்து, இடத்தில் இருப்பது கார் விபத்து.
இது ஒருபுறமிருக்க சக மனிதன் சாலை விபத்தில் அடிபட்டுக் கிடந்தாலும் பார்த்தும் பார்க்காமலும் போகும் மனித சமூகமும் நம்முடனேயே இருக்கத்தான் செய்கின்றது.ஆனாலும், சில நேயமுள்ள, இரக்கமுள்ள மனிதர்கள் உதவ முன்வராமலும் இல்லை. அந்த மனிதர்களுக்காகவே ஒன்றிய அரசு ஒரு முக்கியத் திட்டம் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது.
இது குறித்து ஒன்றிய சாலைப் போக்குவரத்து - நெடுஞ்சாலைகள் துறை அமைச்சகம், 'சாலையில் வாகன விபத்தில் சிக்கியவர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதிப்போருக்கு ஐந்தாயிரம் ரூபாய் வழங்கப்படும்' என்ற வெகுமதித் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
அனைத்து மாநில முதன்மைச் செயலர்கள், போக்குவரத்துச் செயலர்களுக்கு ஒன்றிய அரசு அனுப்பிய கடிதத்தில், 'இந்தத் திட்டம் 2021 அக்டோபர் 15 முதல் 2026 மார்ச் 31 வரை நடைமுறையில் இருக்கும். விபத்தில் சிக்கியவர்களைக் காப்போரை ஊக்குவிக்கவே இந்தத் திட்டம்' எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu