நாகையில் இருந்து இலங்கை காங்கேசன் துறைக்கு மீண்டும் கப்பல் போக்குவரத்து

நாகையில் இருந்து இலங்கை காங்கேசன் துறைக்கு மீண்டும் கப்பல் போக்குவரத்து
X
இந்தியா -இலங்கை கப்பல் போக்குவரத்து (கோப்பு படம்)
நாகையில் இருந்து இலங்கை காங்கேசன் துறைக்கு மீண்டும் கப்பல் போக்குவரத்து வருகிற 19ம் தேதி தொடங்குகிறது.

நாகையில் இருந்து இலங்கை காங்கேசன் துறைக்கு மீண்டும் மே மாதம் 13ம் தேதி கப்பல் போக்குவரத்து தொடங்கப்பட உள்ளது. இதன்மூலம் இனி கப்பலிலேயே பொதுமக்கள் எளிதாக இலங்கை செல்ல முடியும்.

இந்தியா-இலங்கை இடையே பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்க முடிவு செய்யப்பட்டது. இதுதொடர்பாக கடந்த ஆண்டு இந்தியா வந்த இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கேவுடன் பேச்சுவார்த்தை நடத்தி ஒப்பந்தம் கையெழுத்தனாது.

அதன்பிறகு தமிழ்நாட்டின் நாகப்பட்டினத்தில் இருந்து இலங்கையின் காங்கேசன் துறைமுகத்துக்கு கப்பல் போக்குவரத்து தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இதற்காக பிரத்யேகமாக கப்பல் தயாரிக்கப்பட்டது. கேரள மாநிலம் கொச்சியில் கப்பல் கட்டும் தளத்தில் இருந்து கப்பல் தயாரிக்கப்பட்டது. இந்த கப்பலின் பெயர் ‛செரியாபாணி '. அதன்பிறகு சோதனை ஓட்டத்தை தொடர்ந்து கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 14ம் தேதி பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். அதன்பிறகு மழையை காரணம் காட்டி நாகை-இலங்கை இடையேயான கப்பல் சேவை நிறுத்தப்பட்டது. இதையடுத்து மீண்டும் வரும் மே மாதம் 13ம் தேதி முதல் நாகை-காங்கேசன்துறை இடையே கப்பல் சேவை தொடங்கப்பட உள்ளது. இந்த முறை ‛சிவகங்கை' என பெயர் கொண்ட கப்பல் இயக்கப்பட உள்ளது. இந்த கப்பல் தற்போது அந்தமானில் நிற்கும் நிலையில் வரும் 10ம் தேதி சென்னை வழியாக நாகப்பட்டினம் வருகிறது.

இந்த கப்பலின் கீழ்தளத்தில் 130 பேருக்கான இருக்கை உள்ளது. அதேபோல் சிறப்பு வகுப்பு என அழைக்கப்படும் மேல்தளத்தில் 25 இருக்கைகள் உள்ளன. மேல்தளத்தில் அமர்ந்து பயணித்தால் கடலின் அழகை சிறப்பாக காண முடியும். கீழ்தளத்தில் அமர்ந்து செல்ல பயணி ஒருவருக்கு ஜிஎஸ்டி வரியுடன் சேர்த்து டிக்கெட் கட்டணமாக ரூ.5000 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மேல்தள இருக்கையில் அமர்ந்து செல்ல வேண்டும் என்றால் ரூ.7000 கட்டணமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதற்கு முன்பு ரூ.7,670 கட்டணமாக இருந்த நிலையில் தற்போது குறைக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் இருந்து பொதுமக்கள் விமானத்தில் தான் இலங்கை செல்ல வேண்டி உள்ளது. இனி நாகையில் இருந்து கப்பல் மூலமாகவே பொதுமக்கள் இலங்கை சென்று வரலாம்.

இந்த கப்பல் நாள்தோறும் காலை 7 மணிக்கு புறப்படும், பகல் 12 மணிக்கு இலங்கை காங்கேசன் துறைமுகத்தை சென்றடையும். அங்கிருந்து பகல் 1.30 மணிக்கு புறப்பட்டு மாலை 5.30 மணிக்கு நாகை வந்தடையும். பயணிகள் 50 கிலோ எடை வரை எந்தவித கட்டணங்களும் இல்லாமல் தங்கள் உடைமைகளைக் கொண்டு செல்லலாம். இந்தியாவில் இருந்து இலங்கை செல்வோருக்கு விசா தேவையில்லை என இலங்கை அரசு அறிவித்துள்ளது. இதனால் பாஸ்போர்ட் இருந்தாலே சுற்றுலா, தொழில் முறை பயணமாக இந்த கப்பல் மூலம் பொதுமக்கள் இலங்கை சென்று வர முடியும்.

Tags

Next Story