ரெபோ வட்டி விகிதம்அதிகரிப்பு வீடு, வாகன கடன் உயர வாய்ப்பு ரிசர்வ் பேங்க் கவர்னர் தகவல்

ரெபோ வட்டி விகிதம்அதிகரிப்பு  வீடு, வாகன கடன் உயர வாய்ப்பு  ரிசர்வ் பேங்க் கவர்னர் தகவல்
X

ரிசர்வ் பேங்க் கவர்னர்  சக்திகாந்த தாஸ்

நாட்டின் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த ரெபோ வட்டி வீதம் 0.5 சதவீதம் அதிகரிக்கப்பட்டுள்ளதாக ரிசர்வ் பேங்க் கவர்னர் சக்திகாந்த தாஸ் தெரிவித்துள்ளார்.

repo interest rate raisedமும்பை;பணவீக்கத்தினைக் கட்டுப்படுத்த ரெபோ வட்டி விகிதிம் சற்று அதிகரிக்கப்படுவதாக ரிசர்வ் பேங்க் கவர்னர் சக்திகாந்த தாஸ் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

இதுகுறித்து அவர் மேலும் கூறும்போது, ஏற்கனவே இருந்த ரெப்போ வட்டி வீதம் 4.9 லிருந்து தற்போது 5.4 சதவீதமாக ௦.5 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது. இந்திய பொருளாதாரம் பாதிப்படைந்து பணவீக்கமானது அதிகமானதால் இந்த வட்டி விகிதம் உயர்த்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். ஆனால் மற்ற நாடுகளைவிட இந்திய நாட்டின் பொருளாதாரம் சிறப்பாக உள்ளதாகவும் தெரிவித்தார்.மேலும் அவர் கூறும்போது, 2022- 23 நிதியாண்டில் பணவீக்கம் 6.7 சதவீதமாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. 2023 - 24ல் நுகர்வோர் விலை குறியீடானது 5 சதவீதமாக இருக்கும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது.நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில், நேரடி அன்னிய முதலீடு 13.6 பில்லியன் டாலர் என வலுவாக இருந்தது. இது கடந்த ஆண்டின் முதல் காலாண்டில் 11.6 பில்லியன் டாலர் ஆக உள்ளதுஎன ரிசர்வ் பேங்க் கவர்னர் தெரிவித்தார். .

repo interest rate raisedவாடிக்கையாளராகிய நுகர்வோரின் பணவீக்கமானது ஒரு நிலையற்ற ஸ்திரத்தன்மை அற்றதாகவே உள்ளது. பணவீக்கமானது 6 சதவீதமாகவே நீடிக்கும் என எதிர்பார்ப்பதோடு, கிராமப்புற தேவைகளில் ஒரு வித கலவையான போக்கு காணப்படுவதும், உள்நாட்டின் பொருளாதார தேவைகள் அனைத்துமே விரிவடைவதையும் நாம் பார்க்கிறோம். சமையல் எண்ணெயின் விலை சற்று குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிதியாண்டைப்பொறுத்தவரை நாட்டின் பொருளாதார வளர்ச்சியானது 7.2 சதவீதமாகவே நீடிக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. ஆனால் சர்வதேச நாடுகள் அளவில் நடக்கும் பிரச்னைகளால் இந்தியாவின் பொருளாதாரம் பாதிக்கப்படக்கூடும் எனவும் நம்புகிறோம். ரெபோ வட்டி விகிதம் உயர்த்தப்படுவதால், வீடு, வாகன கடன் உள்ளிட்டவை உயரக்கூடும் என தெரிகிறது.

Tags

Next Story
future is ai