ஈ என் டி டாக்டர்களுக்கு வருமானம் கொட்டப் போகுது

பாதிப்புகளை உருவாக்கும் அதிக சத்தத்துக்கு முக்கிய காரணம், ட்ராஃபிக் ஹார்ன். சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வில், அதற்கும் மேல் பாதிப்பை ஏற்படுத்துவது சினிமா தியேட்டர்களில் ஒலிக்கும் ஓசை
`செவிக்கு உணவு இல்லாதபோதே வயிற்றுக்கு ஈய வேண்டும்' என்கிறார் வள்ளுவர். கேள்விச் செல்வம்தான் ஒரு மனிதனின் ஆகப் பெரிய செல்வம் என்பது நம் முன்னோர் நமக்குக் காட்டிய வழி. நம் உடலில் பல உறுப்புகள் உண்டு. அவற்றில் காதுகள் மிக முக்கியமானவை. அந்த மனித காது 140 டெசிபல், சத்தம் வரை கேட்க உகந்தது. சத்தம் அதற்கு மேல் போனால், இதய நோய்கள் உள்ளவர்கள், 50 வயதுக்கு மேற்பட்டவர்கள், உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்கள் காது மந்தம் உள்ளவர்கள் பாதிக்கப் படுவார்கள்.
இந்த பாதிப்புகளை உருவாக்கும் அதிக சத்தத்துக்கு முக்கிய காரணம், ட்ராஃபிக் ஹார்ன். சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வில், அதற்கும் மேல் பாதிப்பை ஏற்படுத்துவது சினிமா தியேட்டர்களில் ஒலிக்கும் ஓசை எனத் தெரியவந்துள்ளது. என்ன வியப்பாக உள்ளதா ?
ஆம்.. இப்போதெல்லாம் டி-சினிமா என்பது பரந்துவிரிந்த ஒரு சொல். சினிமா தயாரிப்பில் இருந்து, அதைத் திரையிடுவது வரை உள்ள எல்லா இடங்களிலும் டிஜிட்டல் தொழில்நுட்பம் தன் மூக்கை நீட்டியிருக்கிறது.
நிறைய வீடுகளில் ஹோம் தியேட்டர், டி.வி.டி. பிளேயர், மியூசிக் சிஸ்டம் என்று பல டிஜிட்டல் கருவிகள் புழக்கத்துக்கு வந்தபின், அதன் தரமும் துல்லியமும் நமக்குத் தெரிய ஆரம்பித்து விட்டன. அதனால், சினிமா பற்றிய நமது எதிர்பார்ப்பும் பன்மடங்கு உயர்ந்துவிட்டது. தியேட்டரில் படம் பார்க்கும் அனுபவம் இன்னும் சிறப்பாக இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்க ஆரம்பித்துவிட்டோம். நாளுக்கு நாள் முன்னேறி வரும் டிஜிட்டல் தொழில்நுட்ப சாத்தியங்கள், நம் எதிர்பார்ப்பை அதிகரித்துக் கொண்டே செல்கிறது
அதே சமயம் முன்னரே சொன்னது போல் சப்தங்களைக் கேட்பதற்கு மட்டுமே நம்முடைய காதுகளின் பயன்பாடு அல்ல. நாம் நிலையாக நிற்பதற்கும்கூட, காதுதான் முக்கியப் பங்காற்றுகிறது. காது வழியாக நாம் சப்தத்தைக் கேட்பதால்தான் பேச முடிகிறது. குழந்தைகள் சப்தத்தை உணர்ந்துதான் பேசவே ஆரம்பிக்கின்றன. மனிதனின் முக்கியமான புலன்களில் ஒன்று காது. தூக்கத்தின்போது கண், மூக்கு, வாய், சருமம் என நான்கு புலன்களும் ஓய்வு பெற்ற பிறகு கடைசியாக தன்னுடைய செயல்பாட்டை நிறுத்துவது காது. அதேபோல், விழிக்கும்போது முதலில் செயல்படத் தொடங்கும் புலனும் அதுதான். எனவே, கேட்கும் சக்தி மனிதனுக்கு கிடைத்த மிகப் பெரிய வரம்.
அபேர்ப்பட்ட செவித் திறனை இப்போதைய சினிமாக்கள் பெரிதும் பாதிக்கின்றன என்கிறார்கள் வல்லுநர்கள்.. நம் வாசகர்கள் நூறு பேராவது நேற்று முன்தினம் ரிலீஸான பீஸ்ட் அல்லது நேற்று வெளியான கே ஜி எஃப் 2 படத்தை தியேட்டருக்குப் போய் பார்த்து இருப்பீர்கள்..அந்த இரண்டு படத்திலும் உபயோகித்த ஒலி அளவைக் கேட்டால் மிரண்டு போய் விடுவீர்கள்..
நவீன வசதி, பிரமாண்டம் என்ற பெயரில் அளவுக்கு மீறிய சப்தங்களால் பலவித நோய்கள் விரைவில் வருமென்றும் அதன மூலம் ஈ என் டி டாக்டர்களுக்கு வருவாய் கொட்டப் போகுது என்பதும் மட்டும் உண்மை
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu