சைரஸ் மிஸ்திரி மரணம் ஒரு பாடம்: காரின் பின்சீட்டில் இருப்பவர்களும் சீட் பெல்ட் அணியுங்கள்

சைரஸ் மிஸ்திரி மரணம் ஒரு பாடம்: காரின் பின்சீட்டில் இருப்பவர்களும் சீட் பெல்ட் அணியுங்கள்
X

ஆனந்த் மகிந்திரா, சைரஸ் மிஸ்ட்ரி

கார் விபத்தில் சைரஸ் மிஸ்ட்ரி உயிரிழந்ததற்கு சீட் பெல்ட் அணியாததே காரணம் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

மும்பை அருகே நடந்த கார் விபத்தில், முன்னாள் டாடா குழும தலைவர் சைரஸ் மிஸ்திரி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். காரில் நான்கு பேர் இருந்தனர், அதில் மிஸ்திரி உட்பட இருவர் சம்பவ இடத்திலேயே இறந்தனர். இறந்த மற்றொரு நபர் ஜஹாங்கீர் பின்ஷா பண்டோல் என அடையாளம் காணப்பட்டுள்ளார். சைரஸ் மிஸ்திரி பின் இருக்கையில் அமர்ந்திருந்தார், கார் விபத்தில் சைரஸ் மிஸ்ட்ரி உயிரிழந்ததற்கு சீட் பெல்ட் அணியாததே காரணம் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

உயிர் பிழைத்த இரண்டு பேரும் சீட் பெல்ட்களுடன் முன்னால் அமர்ந்திருந்தனர். காயமடைந்தவர்கள் - ப்ரீச் கேண்டி மருத்துவமனையின் உயர்மட்ட மருத்துவர் அனாஹிதா பண்டோல் (காரை ஓட்டியவர்) மற்றும் ஜேஎம் பைனான்சியல் பிரைவேட் ஈக்விட்டியின் நிர்வாக இயக்குநரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான டேரியஸ் பண்டோல் ஆகியோர் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

இதில் பின் சீட்டில் இருந்த இருவர் மட்டும் ஏன் உயிரிழந்தனர்? ஏனென்றால் அவர்கள் சீட் பெல்ட் அணியவில்லை

  • விபத்து பாதுகாப்புக்கான முன்னுரிமையான சீட் பெல்ட் அணியாவிட்டால் ஏர்பேக்குகளால் எந்தப் பயனும் இல்லை. ஏர் பேக் என்பது முதல் பாதுகாப்புக்கு இணங்கினால் மட்டுமே இரண்டாவது வரிசை பாதுகாப்பாகும்.
  • சீட் பெல்ட்டை சரியாகப் போடவில்லை என்றால் ஏர் பேக் திறக்காது

அனைத்து கார்களிலும் அரசு விதிமுறைப்படி பின்புற சீட் பெல்ட்கள் உள்ளன, ஆனால் வெகு சிலரே அவற்றைப் பயன்படுத்துகிறார்கள், பின்புறம் மிகவும் பாதுகாப்பானது என்பது ஒரு மாயை. விபத்து நேரிடும்போது புவியீர்ப்பு விசை மிக அதிகமாக இருக்கும், அதாவது விபத்தின் போது பின்னால் இருப்பவர் சில சமயங்களில் 40 மடங்கு அதிக புவியீர்ப்பு விசையில் இருப்பார். இன்னும் தெளிவாக கூற வேண்டுமென்றால், 80 கிலோ எடையுள்ள நபர் 3200 கிலோவாக இருப்பார்

முன்பக்க பயணி சீட் பெல்ட் அணிந்திருந்து, பின்பக்க பயணி அணியாமல் இருந்தால், விபத்தின் போது, ​​யானையின் எடையுடன் பின்பக்க பயணி முன்புறம் விழுந்தால், முன்பக்க பயணி பலத்த காயமடையவோ அல்லது உயிரிழக்கவோ வாய்ப்புள்ளது.

ஒன்றை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். சீட் பெல்ட்களுக்கும் சேர்த்து தான் நாம் பணம் செலுத்துகிறோம் - ஏன் அவற்றைப் பயன்படுத்தக்கூடாது?

எனவே இனிமேல் நீங்கள் பயணம் செய்யும் போது பாதுகாப்பு விதிகளை பின்பற்றவும்.

இந்த விபத்து குறித்து மகிந்திரா நிறுவனத் தலைவர் ஆனந்த் மகிந்திரா, "நான் காரில் பயணிக்கும்போது பின் இருக்கையில் அமர்ந்தாலும் இனிமேல் தவறாமல் சீட் பெல்ட் அணிவேன் என்று உறுதிமொழி ஏற்கிறேன். உங்கள் அனைவருக்கும் இதைச் செய்யுமாறு வேண்டுகோள் விடுக்கிறேன். நம் குடும்பத்திற்காக இதைச் செய்வோம்" என்று ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

Tags

Next Story
உங்களுக்கும் மனஅழுத்தம் இருக்கலாம்...! கவனமா இருங்க..!