ஏ.டி.எம்.,மில் பணம் இல்லையா? வங்கிக்கு அபராதம் விதிக்கும் ரிசர்வ் வங்கி
சாதாரண மனிதன் தனது வங்கிக்கணக்கில் குறைந்தபட்ச தொகை இருப்பு வைக்கவில்லை என்றால், வங்கிகள் அபராதம் வசூலிக்கும் நடைமுறை தற்போது உள்ளது. நமது பணத்தை நாம் எடுப்பதற்கு நமக்கே அபராதம் விதித்து வந்தன வங்கிகள்.
ஆனால், இப்போது வங்கிகளுக்கே அது திரும்பியுள்ளது. ஏ.டி.எம். இயந்திரங்களில் பணம் இல்லை என்றால் சம்பந்தப்பட்ட வங்கிகளுக்கு அபராதம் விதிக்க ரிசர்வ் வங்கி முடிவு செய்துள்ளது.
நாடு முழுதும் தற்போது இரண்டு லட்சத்துக்கும் மேற்பட்ட ஏ.டி.எம்., இயந்திரங்கள் உள்ளன. பல நேரங்களில் ஏ.டி.எம்., இயந்திரங்களில் பணம் இல்லாமல் பொதுமக்கள் அலைய வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது. இது தொடர்பாக ஏராளமான புகார்கள் ரிசர்வ் வங்கிக்கு வந்தன.
அவற்றை பரிசீலித்த ரிசர்வ் வங்கி, ஏ.டி.எம்., இயந்திரங்களில் உரிய நேரத்தில் பணம் நிரப்பாத வங்கிகளுக்கு அபராதம் விதிக்க முடிவு செய்துள்ளது.
அக்., 1 முதல் தொடர்ச்சியாக 10 மணி நேரம் பணம் இல்லாமல் இருக்கும் ஏ.டி.எம்.,மின் வங்கிக்கு, 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu