மருத்துவ கட்டமைப்பை மேம்படுத்த ரூ.50,000 கோடி: ரிசர்வ் வங்கி அறிவிப்பு

மருத்துவ கட்டமைப்பை மேம்படுத்த ரூ.50,000 கோடி: ரிசர்வ் வங்கி அறிவிப்பு
X
மருத்துவ கட்டமைப்பை மேம்படுத்த ரூ.50,000 கோடிக்கு சலுகைகளை ரிசர்வ் வங்கி அறிவித்தது.

இந்திய ரிசர்வ் வங்கி ஆளுநர் ஆளுநர் சக்தி காந்த தாஸ் இன்று காலை 10 மணிக்கு செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, கொரோனா சூழ்நிலைகளை ரிசர்வ் வங்கி கண்காணித்து வருவதாகவும், இரண்டாவது அலை முதல் அலைகளை விட ஆபத்தானது என்றும் அவர் கூறினார்.

அவர் மேலும் கூறுகையில், முதல் அலைக்குப் பிறகு பொருளாதாரம் சிறந்த முன்னேற்றத்தைக் கண்டதாகக் கூறினார். நல்ல பருவமழை காரணமாக கிராமங்களில் தேவை அதிகரிக்கும் என்று நம்புவதாக கூறினார்.

கொரோனாவின் இரண்டாவது அலைக்கு எதிராக போராட மருத்துவமனைகள், ஆக்ஸிஜன் சப்ளையர்கள், தடுப்பூசி இறக்குமதியாளர்கள், கொரோனா மருந்துகள் ஆகிய மருத்துவ கட்டமைப்பை மேம்படுத்த ரூ.50,000 கோடிக்கு சலுகைகளை ரிசர்வ் வங்கி வழங்குவதாக தெரிவித்தார்.

Tags

Next Story
பெருந்துறையில் புகையிலை விற்பனைக்கு எதிராக கடைகளுக்கு ரூ.50 ஆயிரம் அபராதம்