ராமர் கோவில் கும்பாபிஷேகம்: அசாமில் நாளை அசைவ உணவுகளுக்கு தடை

ராமர் கோவில் கும்பாபிஷேகம்: அசாமில் நாளை அசைவ உணவுகளுக்கு தடை
X

அயோத்தியில் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு மலர் தூவி அலங்கரிக்கப்பட்டுள்ள ராமர் கோயில்.

ராமர் கோவில் கும்பாபிஷேகத்தையொட்டி அசாமில் நாளை அசைவ உணவுகள் விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.

சில்சார்: அயோத்தியில் ராமர் கோயில் திறப்பு விழாவை முன்னிட்டு நாளை (ஜனவரி 22 ஆம் தேதி) அனைத்து வகையான அசைவ உணவுப் பொருட்களுக்கும் தடை விதிப்பதாக அசாம் அரசு அறிவித்துள்ளது.

ராமர் கோயில் திறப்பு விழா நடைபெறும் திங்கள்கிழமை மாலை 4 மணி வரை மாநிலம் முழுவதும் அனைத்து வகையான அசைவ உணவுப் பொருட்களையும் விற்பனை செய்ய தடை விதிப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளதாக முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 500 ஆண்டுகளுக்குப் பிறகு எங்களுக்கு வந்த ஒரு தருணம். அத்தகைய தருணம் மீண்டும் நம் வாழ்வில் வருமா என்று எங்களுக்குத் தெரியாது. இதை மறக்கமுடியாததாக மாற்றுவது நமது கடமை.

இது ஒரு அரசியல் அல்லது மத நிகழ்வு அல்ல, மாறாக இது வெளிநாட்டு படையெடுப்பாளர்களுக்கு எதிரான இந்தியாவின் வெற்றியின் தருணம்.

எனவே ராம் லல்லாவுக்காக சிறப்பு தொழுகை மற்றும் பிரார்த்தனையை நடத்துமாறு இஸ்லாமிய மற்றும் கிறிஸ்தவ சமூகங்களுக்கு நான் வேண்டுகோள் விடுக்கிறேன். இது பாபர் போன்ற படையெடுப்பாளர்களுக்கு எதிரான எங்கள் வெற்றி.

மாநிலம் முழுவதும் முக்கியமான பகுதிகளில் மத்திய ரிசர்வ் போலீஸ் படை (சிஆர்பிஎஃப்) போன்ற போதுமான போலீஸ் மற்றும் துணை ராணுவப் படைகளை நிறுத்தியுள்ளதாகவும், மக்கள் வீட்டிலேயே இருக்கவும், எந்தவிதமான மோதல்களையும் தவிர்க்க வேண்டுகோள் விடுத்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

இதேபோல் உத்தரபிரதேசம், மத்தியப் பிரதேசம், குஜராத், உத்தரகண்ட், சத்தீஸ்கர் மற்றும் ஹரியானா உள்ளிட்ட பல மாநிலங்கள் ராம் மந்திர் பிரான் பிரதிஷ்டாவைக் கொண்டாடுவதற்காக இறைச்சி, மீன் மற்றும் மதுபான விற்பனைக்கு தடை விதித்துள்ளன.

தனியார் கல்வி நிறுவனங்களும் இதைப் பின்பற்ற வேண்டும் என்று நாங்கள் வேண்டுகோள் விடுத்துள்ளோம், மேலும் வணிகர்கள் தங்கள் கடைகளை மதியம் 2 மணி வரை மூடுமாறு கேட்டுக் கொண்டுள்ளோம். பிராண பிரதிஷ்டா தருணத்தை காண அவர்களின் ஊழியர்களுக்கு வாய்ப்பு கிடைக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

மேலும் அசாம் மக்களிடம் நாளை பிற்பகல் 2 மணி வரை உண்ணாவிரதம் இருக்குமாறு அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடி 11 நாள் உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ளார். நாங்கள் யாரையும் கட்டாயப்படுத்தவில்லை, ஆனால் திங்கள்கிழமை மதியம் 2 மணி வரை எதையும் சாப்பிடுவதைத் தவிர்க்குமாறு அனைவருக்கும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

சில்சாரில் உள்ள தேசிய தொழில்நுட்ப நிறுவனம் (என்.ஐ.டி) இந்த கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக யாகம் மற்றும் 20,000 அகல் விளக்குகளை ஏற்பாடு செய்வதாக தெரிவித்துள்ளது..

இதுகுறித்து என்.ஐ.டி சில்சார் மாணவர்கள் கூறுகையில், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் இருவரும் இந்த திட்டத்தை ஏற்பாடு செய்கிறார்கள். இதற்காக என்.ஐ.டி இயக்குநர் உள்ளிட்ட பேராசிரியர்கள் நன்கொடை அளித்துள்ளதாகவும், நாைள மாலை 20,000 அகல் விளக்குகளை ஏற்ற உள்ளதாகவும் மாணவர்கள் தெரிவித்தனர்.

Tags

Next Story