சர்ச்சையில் சிக்கிய ராம் கோபால் வர்மா: திரௌபதி குடியரசு தலைவர் என்றால், பாண்டவர்கள் யார்?

சர்ச்சையில் சிக்கிய ராம் கோபால் வர்மா: திரௌபதி குடியரசு தலைவர் என்றால், பாண்டவர்கள் யார்?
X
Today Delhi Election News - திரௌபதி குடியரசு தலைவர் என்றால், பாண்டவர்கள் யார்? அதைவிட முக்கியாக கௌரவர்கள் யார்? என்ற ராம் கோபால் வர்மாவின் சர்ச்சைக்குரிய ட்வீட் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Today Delhi Election News - பிரபல திரைப்பட இயக்குனர் ராம் கோபால் வர்மா சர்ச்சைக்குரிய கருத்துக்களுக்கு பெயர் பெற்றவர். வாயை கொடுத்து வாங்கிக் கட்டிக்கொள்வதில் பெயர் பெற்றவர். அதிரடியாக ஏதாவது கருத்துக்களை தெரிவித்து ராம் கோபால் வர்மா சர்ச்சைக்களில் சிக்கி கொள்வார். தற்போது பா.ஜ.க. மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணியின் குடியரசு தலைவர் வேட்பாளர் திரௌபதி முர்மு குறித்து ஒரு சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்து ராம் கோபால் வர்மா பிரச்சினையை வம்பாக விலைக்கு வாங்கியுள்ளார்.


ராம் கோபால் வர்மா தனது டிவிட்டர் பக்கத்தில், திரௌபதி குடியரசு தலைவர் என்றால், பாண்டவர்கள் யார்? அதைவிட முக்கியாக கௌரவர்கள் யார் என பதிவு செய்து இருந்தார்.

ராம் கோபாலி இந்த ட்வீட் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ராம் கோபால் வர்மாவின் இந்த டிவிட் பா.ஜ.க.வினருக்கு கடும் கோபத்தை கிளப்பியது. தெலங்கானா பா.ஜ.க. தலைவர் கூடூர் நாராயண ரெட்டி, பட்டியலின சமூகத்தை அவமரியாதை செய்ததாக குற்றம் சாட்டி ராம் கோபால் வர்மாவுக்கு எதிராக காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.


அதேசமயம் தனது ட்வீட் குறித்து ராம் கோபால் வர்மா விளக்கம் அளித்துள்ளார். அதில், மகாபாரத்தில் திரௌபதி எனக்கு மிகவும் பிடித்த பாத்திரம் ஆனால் அந்த பெயர் மிகவும் அரிதானது, தொடர்புடைய கதாபாத்திரங்கள் இப்போதுதான் நினைவுக்கு வந்தது அதனால் என் வெளிப்பாடு. யாருடைய மனதையும் புண்படுத்தும் நோக்கத்தில் இல்லை என பதிவு செய்து இருந்தார்.

அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags

Next Story