வீரதீர செயல்புரிந்த கடலோர காவல்படை வீரர்களுக்கு பதக்கம் வழங்கி பாராட்டு

வீரதீர செயல்புரிந்த கடலோர காவல்படை வீரர்களுக்கு பதக்கம் வழங்கி பாராட்டு
X
இந்திய கடலோர காவல்படை வீரர்களுக்கு வீரதீர மற்றும் சிறப்பான சேவைக்கான பதக்கங்களை பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் வழங்கினார்

புதுதில்லியில் இன்று நடைபெற்ற விருதுகள் வழங்கும் நிகழ்ச்சியில் இந்திய கடலோர காவல்படை வீரர்களுக்கு வீரதீர மற்றும் சிறப்பான சேவைக்கான பதக்கங்களை பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத்சிங் வழங்கினார்.

குடியரசுத் தலைவரின் மூன்று தத்ராக்ஷக் பதக்கங்கள் (சிறப்பான சேவை), எட்டு தத்ராக்ஷக் பதக்கங்கள் (வீர தீர செயல்கள்) மற்றும் 10 தத்ராக்ஷக் பதக்கங்கள் (சிறப்பான சேவை) உட்பட மொத்தம் 21 விருதுகள் விழாவின் போது வழங்கப்பட்டன. தன்னலமற்ற அர்ப்பணிப்பு, முன்மாதிரியான தைரியம் மற்றும் இக்கட்டான நிலைமைகளில் கடலோர காவல்படை பணியாளர்களின் வீர தீர செயல்களை அங்கீகரிப்பதற்காக இந்த பதக்கங்கள் வழங்கப்படுகின்றன.

விழாவில் பேசிய ராஜ்நாத் சிங், வெற்றியாளர்களுக்கு தனது வாழ்த்துகளைத் தெரிவித்தார். இந்த விருதுகள் மற்றும் பதக்கங்கள் வீரர்களின் மன உறுதியை மேம்படுத்துவதோடு மட்டுமல்லாமல், நாட்டின் நலன்களைப் பாதுகாக்க தங்களால் இயன்றதை வழங்க மற்ற வீரர்களுக்கு ஊக்கமளிக்கின்றன. கடல் எல்லைகளின் பாதுகாப்பைப் பேணுவதற்கும் நாட்டின் பரந்த கடற்கரையைப் பாதுகாப்பதற்கும் கடலோர காவல்படை எடுத்து வரும் முயற்சிகளை அவர் பாராட்டினார். விழாவைத் தொடர்ந்து, 38-வது கடலோர காவல்படை தளபதிகள் மாநாட்டிலும் அமைச்சர் உரையாற்றினார்.

Tags

Next Story
100% இத மட்டும் ஃபாலோ பண்ணுங்க.. ஒரே மாசத்துல 10,12 கிலோ எடை குறையலாம்..! ரொம்ப ஈஸியா..! | Easy weight loss diet plan in Tamil