ராஜ்யசபா தேர்தல்: பாஜக 8 இடங்களிலும், காங்கிரஸ் 5 இடங்களிலும் வெற்றி பெற்றது

ராஜ்யசபா தேர்தல்: பாஜக 8 இடங்களிலும், காங்கிரஸ் 5 இடங்களிலும் வெற்றி பெற்றது
X
ராஜ்யசபா தேர்தல்: 4 மாநிலங்களில் பாஜக 8 இடங்களிலும், காங்கிரஸ் 5 இடங்களிலும் வெற்றி பெற்றது

மகாராஷ்டிரா, கர்நாடகா, ஹரியானா மற்றும் ராஜஸ்தான் ஆகிய நான்கு மாநிலங்களில் உள்ள 16 ராஜ்யசபா இடங்களுக்கு வெள்ளிக்கிழமை வாக்குப்பதிவு நடைபெற்று, நான்கு மாநிலங்களுக்கான முடிவுகள் சனிக்கிழமை அதிகாலையில் அறிவிக்கப்பட்டன.

ராஜஸ்தானில், காங்கிரஸ் மூன்று இடங்களிலும், பாஜக ஒரு இடத்திலும் வெற்றி பெற்றன. கர்நாடகாவில்,பாஜக நான்கில் மூன்றில் வெற்றி பெற்றது காங்கிரஸ் ஒரு இடத்தைத் தக்க வைத்துக் கொண்டது.

ஹரியானாவில் பாஜக ஒரு இடத்தையும், அதை ஆதரித்த சுயேச்சை வேட்பாளர் மற்றொரு இடத்தையும் கைப்பற்றினர். காங்கிரஸால் வெற்றி பெற முடியவில்லை.

மகாராஷ்டிராவில் மகா விகாஸ் அகாடி (எம்.வி.ஏ) கூட்டணிக்கு எதிராக கடுமையான போட்டியில் பாஜக ஆறில் மூன்றில் வெற்றி பெற்றது.

இந்த இரண்டு மாநிலங்களிலும், இரு கட்சியினரும் புகார்கள் மற்றும் எதிர் புகார்கள் காரணமாக, எட்டு மணி நேரத்திற்கும் மேலாக தாமதத்திற்குப் பிறகு வாக்கு எண்ணிக்கை தொடங்கியது.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!