பால்கவர், பிளாஸ்டிக் பாட்டில் கொடுக்கணும் ராஜஸ்தானில் பெட்ரோல் ,டீசலுக்கு அதிரடி ஆஃபர்
இந்தியாவைப்பொறுத்தவரை நாளொரு மேனியும்பொழுதொரு வண்ணமுமாக பெட்ரோல் விலை விண்ணைத் தொடுவது போல் ஏறிக்கொண்டிருக்கிறது. இதனால் நடுத்தர குடும்பத்தினர் உட்பட அனைத்து தரப்பினரும் கடுமையாக பாதிப்படைந்து வருகின்றனர்.
இதனால் அத்யாவசிய பொருட்களின் விலையும் கடுமையாக உயர்ந்ததால் என்ன செய்வது என்று குடும்ப பெண்கள் விழி பிதுங்கி நிற்கின்றனர். ஒரு சிலர் பல மாநிலங்களில் இதனால் நடராஜா சர்வீசில் (நடை) செல்ல ஆரம்பித்து விட்டனர். வண்டியில் கை வைத்தால்தானே பெட்ரோல் தேவை . அதற்கு நடையே மேல் அல்லது சைக்கிளை உபயோகப்படுத்த ஆரம்பித்துள்ளனர்.
ஆடிமாதம் என்றால் த மிழகத்தில் துணிக்கடைகளில் ஆடித்தள்ளுபடி தருவதுபோல் பெட்ரோல் பங்குகளில் தள்ளுபடி தரமாட்டார்களா? என ஏங்கிய ஆண்களுக்கு ஒரு அதிர்ச்சி தகவல் ராஜஸ்தான்மாநிலத்திலுள்ள பெட்ரோல் பங்க் மூலம் கிடைத்துள்ளது.
ராஜஸ்தான் மாநிலத்திலுள்ள அசோக்குமார் முந்த்ரா என்பவர் அங்குள்ள பில்வாரா பகுதியில் பெட்ரோல் பங்க் நடத்தி வருகிறார். அவர் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாட்டைகுறைக்கும் நோக்கிலும் விழிப்புணர்வு ஏற்படுத்ததபுதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளாார். அதாவது காலி பால்பாக்கெட்டுகள், மற்றும் பிளாஸ்டிக் காலி தண்ணீர் பாட்டில்களை கொண்டு வந்து கொடுத்தால் பெட்ரோல், டீசல் விலையில் தள்ளுபடி வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.
காலி பால் பாக்கெட்டுகள் அரை லிட்டர் என்றால் இரண்டும், ஒரு லிட்டர் என்றால் ஒன்றும், காலி தண்ணீர் பாட்டில் ஒருலிட்டர் அளவு கொண்டதிற்கும் இந்த தள்ளுபடி வழங்கப்படுகிறது. இந்த காலி பால் பாக்கெட்டுகள் அனைத்துமே பில்வாரா பகுதியிலுள்ள சாரஸ் டெய்ரி நிறுவனம் பெற்றுக்கொள்கிறது. இதுவரை 700 பால்பாக்கெட்டுகள் வந்துள்ளதாக அதன் உரிமையாளர் தெரிவித்துள்ளார்.
பெட்ரோல் விலையில் ரூ. 1ம், டீசல்விலையில் ஐம்பது பைசாவும் தள்ளுபடி வழங்கப்படும் என பில்வாரா மாவட்ட நிர்வாகம் மற்றும் மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் சார்பில் பெட்ரோல் பங்க் உரிமையாளர் இந்த தள்ளுபடியை அறிவித்துள்ளதாக தெரிகிறது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu