உணவு, பானங்களுக்கான சேவைக் கட்டணத்தை நீக்கிய ரயில்வே
பைல் படம்.
பிரீமியம் ரயில்களில் முன்கூட்டிய ஆர்டர் செய்யப்படாத அனைத்து உணவு மற்றும் பானங்கள் மீதான ஆன்-போர்டு சேவைக் கட்டணங்களை ரயில்வே நீக்கியுள்ளது. ஆனால் காலை உணவு, மதிய உணவுகள் மற்றும் இரவு உணவுகளின் விலையில் ரூ.50 கட்டணம் சேர்க்கப்பட்டுள்ளது.
டீ மற்றும் காபியின் விலைகள் முன்பதிவு செய்தவர்கள் அல்லது ரயிலில் ஆர்டர் செய்தவர்கள் போன்ற அனைத்து பயணிகளுக்கும் ஒரே மாதிரியாக இருக்கும். மேலும் கட்டணம் உயர்த்தப்படாது.
இந்திய ரயில்வே கேட்டரிங் மற்றும் டூரிஸம் கார்ப்பரேஷன் (IRCTC)-ன் முந்தைய விதிமுறைகளின்படி, ஒருவர் தனது ரயில் டிக்கெட்டுடன் உணவுகளை முன்பதிவு செய்யவில்லை என்றால், பயணத்தின் போது உணவை ஆர்டர் செய்யும் போது ஒரு கப் டீ அல்லது காபி ரூ.20 கப் அதற்கு .கூடுதலாக ரூ. 50 செலுத்த வேண்டும்.
இப்போது, ராஜ்தானி, துரந்தோ அல்லது சதாப்தி போன்ற பிரீமியம் ரயில்களில் உணவுக்கு முன்பதிவு செய்யாத பயணிகள், டீக்கு ரூ.20 செலுத்துவார்கள் (உணவுக்கு முன்பதிவு செய்தவர்கள் செலுத்தும் தொகையைப் போன்றது). முன்னதாக, முன்பதிவு செய்யாத டீயின் விலை, சேவைக் கட்டணம் உட்பட ரூ.70 ஆக இருந்தது.
முன்பு காலை உணவு, மதிய உணவு மற்றும் மாலை நேர சிற்றுண்டிகளுக்கான விலைகள் முறையே ரூ.105, ரூ,185 மற்றும் ரூ. 90 ஆக இருந்தது, ஒவ்வொரு உணவிற்கும் ₹50 கூடுதல் கட்டணம் விதிக்கப்பட்டது. தற்போது பயணிகள் இப்போது இந்த உணவுகளுக்கு ரூ.155, ரூ.235 மற்றும் ரூ. 140 செலுத்த வேண்டியிருக்கும்
இது குறித்து ரயில்வே அதிகாரி கூறுகையில், "டீ மற்றும் காபிக்கு மட்டுமே சேவைக் கட்டணம் நீக்கப்பட்டுள்ளது. இதில், முன்பதிவு செய்யாத பயணி, முன்பதிவு செய்த பயணியின் அதே தொகையை செலுத்துவார். இருப்பினும், மற்ற அனைத்து உணவுகளுக்கும் உணவு விலையில் சேவை கட்டணத் தொகை சேர்க்கப்பட்டுள்ளது" என்று விளக்கினார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu