ரயில்களில் சீனியர் சிட்டிசன் சலுகை கட்: ரயில்வே அமைச்சர்

ரயில்களில் சீனியர் சிட்டிசன் சலுகை கட்: ரயில்வே அமைச்சர்
X
ரயில்களில் மூத்த குடிமக்களுக்கு வழங்கப்பட்ட சலுகை மீண்டும் வழங்கப்படமாட்டது என ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார்.

இந்தியாவில் கொரோனா கலத்தில் சில காலம் ரயில் சேவை முற்றிலுமாக முடக்கப்பட்டது. அதன் பின்னர், படிப்படியாக ரயில் சேவை மீண்டும் ஆரம்பிக்கப்பட்டது. அப்போது, மூத்த குடிமக்களுக்கு வழங்கப்பட்டு வந்த ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இந்த சலுகை ரத்து செய்யப்பட்டதால், இந்தியன் ரயில்வேக்கு ரூ 1,500 கோடி வருவாய் கிடைத்துள்ளதாக ரயில்வே சமீபத்தில் கூறியது.

சென்னை ஐ.ஐ.டி மாணவர்கள் அடுத்த தலைமுறைக்கான போக்குவரத்து மாற்றத்திற்காக ஹைப்பர் லூப் திட்டத்தை வடிவமைத்து உள்ளனர் . அதனை பார்வையிட்ட மத்திய ரயில்வே மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் செய்தியாளர்களிடம் பேசுகையில், மூத்த குடிமக்களுக்கு வழங்கப்பட்ட சலுகை ரத்து செய்யப்பட்டது குறித்து தெரிவித்துள்ளார்.

இது குறித்து அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் மேலும் கூறுகையில், ரயில்வே இயக்கச் செலவுகளுக்காகச் செலவிடப்படும் ஒவ்வொரு ரூ.100க்கும், ஒரு பயணியிடம் இருந்து ரூ.45 மட்டுமே ரயில்வே வசூலிக்கிறது. ரயில்வே துறையை ஒரு நிலையான போக்குவரத்து முறையாக வைத்திருக்கப் பொதுமக்களான நாம் பங்களிக்க வேண்டும் என்று கூறினார்

Tags

Next Story
இன்ஸ்டாகிராம் முடக்கம் !!! பயனர்கள் அதிர்ச்சி !! அதிகரிக்கின்றது புகார்கள் !!! | why does instagram hang up by itself