பேரறிவாளன் விடுதலை: திமுக எம்.பியிடம் கோபத்தை காட்டிய ராகுல்

பேரறிவாளன் விடுதலை: திமுக எம்.பியிடம் கோபத்தை காட்டிய ராகுல்
X

பிரிட்ஜ் இந்தியா அமைப்பின் சார்பில் லண்டனில் நடைபெற்ற சர்வதேச சர்வதேச மாநாட்டில் கலந்து கொண்ட ராகுல்காந்தி

பேரறிவாளன் விடுதலைக்கு திமுக ஆதரவு தெரிவித்ததால் திமுக எம்.பியிடம் கோபத்தை காட்டிய ராகுல் காந்தி

ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் 31 ஆண்டுகள் சிறையில் இருந்த பேரறிவாளனை உச்ச நீதிமன்றம் விடுதலை செய்தது. குற்றவாளி என்று தீர்ப்பளித்த உச்சநீதிமன்றமே பேரறிவாளனை விடுதலை செய்திருப்பதால் நீதிமன்றத்தின் மீது இருந்த நம்பிக்கை போய்விட்டது என்று காங்கிரசார் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். பேரறிவாளன் விடுதலைக்கு எதிராக காங்கிரசார் ஆர்ப்பாட்டங்களும் நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், காங்கிரஸ் கூட்டணியில் இருக்கும் திமுகவினர் பேரறிவாளன் விடுதலையை வரவேற்று பேசி வருகின்றனர். பேரறிவாளனை அழைத்து கட்டி அணைத்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தி இருந்தார் முதல்வர் மு க ஸ்டாலின். முதல்வர் ஸ்டாலினின் இந்த செயல் ராகுல் காந்தியையும் பெரிதும் பாதித்திருக்கிறது.

பிரிட்ஜ் இந்தியா என்கிற அமைப்பின் சார்பில் லண்டனில் 'இந்தியாவுக்கான சிந்தனைகள்' என்கிற தலைப்பில் சர்வதேச மாநாடு நேற்று நடந்தது. இந்த மாநாட்டில் காங்கிரஸ் எம். பி. ராகுல் , மார்க்சிஸ்ட் பொதுச் செயலர் சீதாராம் யெச்சூரி, திரிணமுல் காங்கிரஸ் எம்.பி., மஹுவா மொயித்ரா, ராஷ்ட்ரீய ஜனதா தள தலைவர்கள் தேஜஸ்வி யாதவ், மனோஜ் குமார் ஜா, தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி தலைவர் கே.டி.ராம ராவ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இந்த மாநாட்டில் பங்கேற்பதாக இருந்த திருச்சி சிவா எம்.பி. பங்கேற்கவில்லை. பேரறிவாளன் விடுதலைக்கு திமுக ஆதரவு தெரிவித்ததால், திமுகவுக்கு விடுக்கப்பட்டிருந்த அழைப்பை ராகுல் காந்தி ரத்து செய்ததே காரணம் என்ற தகவல் வெளியாகி இருக்கிறது.

ஸ்டாலின் மீதுள்ள கோபத்தை திமுக எம்.பி. மீது ராகுல்காந்தி காட்டியிருப்பதாக கூறப்படுகிறது

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!