Rahul Gandhi returns as MP ராகுல் காந்திக்கு மீண்டும் மக்களவை உறுப்பினர் பதவி

Rahul Gandhi returns as MP ராகுல் காந்திக்கு மீண்டும்  மக்களவை உறுப்பினர் பதவி
X

ராகுல் காந்தி 

மோடி குடும்பப்பெயர் வழக்கில் உச்சநீதிமன்றம் தடை விதித்ததையடுத்து, ராகுல் காந்தியின் மக்களவை உறுப்பினர் பதவி மீட்கப்பட்டது

அவதூறு வழக்கில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சூரத் நீதிமன்றம் கோர்ட்டு தீர்ப்பளித்தது. இதைத் தொடர்ந்து ராகுல் காந்தியின் எம்.பி. பதவி பறிக்கப்பட்டது. இந்த தீர்ப்பை குஜராத் உயர்நீதிமன்றம் உறுதி செய்த நிலையில், ராகுல் காந்தி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.

இந்த வழக்கு நீதிபதி பி.ஆர்.கவாய், நீதிபதி பி.எஸ்.நரசிம்மா, நீதிபதி சஞ்சய் குமார் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், ராகுல் காந்திக்கு சூரத் கோர்ட்டு விதித்த 2 ஆண்டு சிறை தண்டனையை நிறுத்தி வைத்து உத்தரவிட்டனர்.

மேலும், "அதிகபட்ச தண்டனை காரணமாக தனிநபரின் உரிமை மட்டுமல்லாமல் தொகுதி மக்களின் உரிமையும் பாதிக்கப்படுகிறது. இந்த வழக்கில் ஒரு தொகுதியின் பிரதிநிதித்துவம் இல்லாமல் போகும் அளவிற்கு இந்த வழக்கு பொருத்தமானதா?" என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

உச்சநீதிமன்ற உத்தரவால் ராகுல் காந்தி மீண்டும் எம்.பி. ஆவதற்கு வாய்ப்புகள் அதிகரித்து உள்ளன. அதன்படி ராகுல் காந்தி அவைக்குள் மீண்டும் அடுத்த வாரமே நுழைய , இந்த வழக்கில் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பு முதலில் மக்களவை செயலகத்துக்கு கிடைக்க வேண்டும்.


இந்நிலையில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மீண்டும் எம்.பி.யாக வருவதற்கு மக்களவைச் செயலகம் திங்கள்கிழமை மக்களவையில் அனுமதி அளித்தது. கடந்த வாரம், கிரிமினல் அவதூறு வழக்கில் அவருக்கு விதிக்கப்பட்ட தண்டனையை உச்ச நீதிமன்றம் நிறுத்தி வைத்தது. மக்களவையில் நாளை தொடங்கும் நம்பிக்கையில்லா தீர்மான விவாதத்தில் ராகுல் பங்கேற்க வேண்டும் என்று காங்கிரஸ் விரும்புகிறது.

இது நீதிக்கும் நமது ஜனநாயகத்திற்கும் கிடைத்த வெற்றி என்று காங்கிரஸ் மூத்த எம்பி சசி தரூர் தெரிவித்துள்ளார். "மிகப்பெரிய நிவாரணத்துடன், ராகுல் காந்தி மீண்டும் பதவியில் அமர்த்தப்பட்டதன் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வரவேற்கிறேன். அவர் இப்போது மக்களவையில் தனது பணியை மீண்டும் தொடங்கலாம். இந்திய மக்களுக்கும் வயநாட்டில் உள்ள அவரது தொகுதி மக்களுக்கும் சேவை செய்ய முடியும். நீதிக்கும் நமது ஜனநாயகத்திற்கும் கிடைத்த வெற்றி!" அவர் ட்வீட் செய்தார்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!