கார்த்தி சிதம்பரத்தை கண்டுகொள்ளாமல் நடந்து சென்ற ராகுல் காந்தி

கார்த்தி  சிதம்பரத்தை கண்டுகொள்ளாமல் நடந்து சென்ற ராகுல் காந்தி
X

பைல் படம்.

நாடாளுமன்ற வளாகத்திற்கு வந்த ராகுல்காந்தி சிவகங்கை எம்.பி. கார்த்தி சிதம்பரத்தை கண்டுகொள்ளாமல் நடந்து சென்ற வீடியோ வெளியாகியுள்ளது.

முன்னாள் காங்கிரஸ் தலைவரான ராகுல் காந்தி கடந்த 2019ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தல் பிரசாரத்தின் போது, மோடி என்ற பெயர் கொண்டவர்கள் திருடர்கள் என பேசியதாகவும், அவர் பிரதமர் மோடியை மறைமுகமாக தாக்கியதாகவும் பாஜக சார்பில் குஜராத் மாநிலம் சூரத் நீதிமன்றத்தில் வழக்கு தொரடப்பட்டது.

இந்த வழக்கில் ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சூரத் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இதையடுத்து வயநாடு நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்படுவதாக மக்களவை செயலகம் அறிவித்தது. இதையடுத்து ராகுல் காந்தியின் தகுதி நீக்கத்தை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். நாடாளுமன்ற காங்கிரஸ் உறுப்பினர்கள் கருப்பு உடை அணிந்து தங்கள் எதிர்ப்பை பதிவு செய்து வருகின்றனர்.

இந்நிலையில், ராகுல் காந்தி நாடாளுமன்றத்திற்கு இன்று சென்றார். அப்போது வெளியே நின்றிருந்த காங்கிஸ் உறுப்பினர்கள் மற்றும் எம்பிகளுக்கு வணக்கம் சொல்லி ராகுல் காந்தி கைக்கொடுத்தார். ஆனால் சிவகங்கை தொகுதி காங்கிரஸ் எம்பி கார்த்தி சிதம்பரத்தை பார்த்து ராகுல் காந்தி கைக் கொடுக்காமல் சென்ற வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Tags

Next Story
ai in future agriculture