/* */

நம்பிக்கையில்லா தீர்மானம்: விவாதத்தை ராகுல் தொடங்கி வைக்க வாய்ப்பு?

இன்று தொடங்கும் பா.ஜ.க. அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான விவாதத்தை ராகுல் காந்தி தொடங்கி வைக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது

HIGHLIGHTS

நம்பிக்கையில்லா தீர்மானம்:  விவாதத்தை ராகுல் தொடங்கி வைக்க வாய்ப்பு?
X

ராகுல் காந்தி 

கடந்த மாதம் 20-ம் தேதி நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் தொடங்கியது. இந்த கூட்டத்தொடரில் 32 மசோதாக்களை நிறைவேற்ற மத்திய அரசு திட்டமிட்டு இருந்தது.

ஆனால் மணிப்பூர் கலவரம் குறித்து நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி விளக்கம் அளிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்தன. அதற்கு பிரதமர் தரப்பில் இருந்து எந்த பதிலும் தெரிவிக்கப்பதாததால் கூட்டத்தொடரின் முதல் நாளில் இருந்து எதிர்க்கட்சிகள் ஒருங்கிணைந்து கடும் அமளியில் ஈடுபட்டு வருகின்றன.

இதையடுத்து பிரதமர் மோடி அரசுக்கு நெருக்கடி கொடுக்கும் வகையில் 'இந்தியா' எதிர்க்கட்சி கூட்டணிகள் நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தன. பிரதமர் மோடியை நாடாளுமன்றத்தில் பேச வைக்க வேண்டும் என்ற இலக்குடன் அந்த நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற சபாநாயகர் ஓம்பிர்லா எதிர்க்கட்சிகளின் நம்பிக்கையில்லா தீர்மானத்தை ஏற்றுக்கொண்டார். அதன்மீது ஆகஸ்டு 8, 9 தேதிகளில் விவாதம் நடைபெறும் என்று அறிவித்தார்.

அதன்படி நாடாளுமன்றத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான விவாதம் தொடங்குகிறது. விவாதத்துக்கு மொத்தம் 12 மணி நேரத்தை ஒதுக்கி அலுவல் ஆய்வுக்குழு அறிவித்துள்ளது. விவாதத்தின்போது மணிப்பூர் கலவரம் தொடர்பாக பல்வேறு குற்றச்சாட்டுக்களை ஆதாரங்களுடன் எழுப்புவதற்கு எதிர்க்கட்சிகள் தயாராகி வருகின்றன.

குறிப்பாக மே 4-ந்தேதி 2 பெண்கள் ஆடைகள் இன்றி ஊர்வலமாக அழைத்து செல்லப்பட்ட விவகாரத்தை எழுப்பி சர்ச்சையை உருவாக்க உள்ளன. எனவே இன்றும், நாளையும் நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான விவாதம் அனல் பறக்கும் வகையில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதன்படி இன்று மக்களவையில் விவாதம் தொடங்க இருக்கிறது. காங்கிரஸ் முன்னாள் தலைவர், ராகுல் காந்தி விவாதத்தை தொடங்கி வைப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. அதனைத்தொடர்ந்து கவுரவ் கோகாய், மணிஷ் திவாரி, தீபக் பாய்ஜ் ஆகியோர் நம்பிக்கையில்லாத தீர்மானம் குறித்து பேசுவார்கள் என தகவல் வெளியாகியுள்ளது.

எதிர்க்கட்சிகளின் விவாதத்துக்கு மத்திய அரசு சார்பில் 10-ந்தேதி (வியாழக்கிழமை) பதில் அளிக்கப்பட உள்ளது. பொதுவாக நம்பிக்கையில்லா தீர்மானம் மீது எதிர்க்கட்சிகளுக்கு பிரதமர் பதில் அளிப்பது மரபாக உள்ளது. அந்த வகையில் பிரதமர் மோடி 10-ந்தேதி பதில் அளித்து பேசுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Updated On: 8 Aug 2023 2:44 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    எனக்கு தாலாட்டு பாடிய 'இரண்டாம் தாய்' அக்காவுக்கு பிறந்தநாள்...
  2. லைஃப்ஸ்டைல்
    ஆசையுடன் அப்பாவுக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  3. வீடியோ
    Bhagyaraj மருமகளுடன் குத்தாட்டம் போட்ட Gayathri Raghuram ! #dance...
  4. லைஃப்ஸ்டைல்
    ரமலான் வாழ்த்துச் சொல்வோம் வாங்க..!
  5. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  6. லைஃப்ஸ்டைல்
    நண்பனின் பிறந்தநாளில் வேடிக்கையா கலாய்க்கலாம் வாங்க
  7. லைஃப்ஸ்டைல்
    வேடிக்கையான பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
  8. வீடியோ
    பெண் வேடத்தில் வந்த Cool Suresh ! அரண்டுபோன K Raja !#coolsuresh...
  9. இந்தியா
    ஒருபோதும் இந்து அல்லது முஸ்லீம் என்று சொல்லவில்லை: பிரதமர் மோடி
  10. லைஃப்ஸ்டைல்
    சாப்பாட்டுக்கு முன்னும் பின்னும் டீ, காபியை தவிர்க்க வேண்டுமாம்....