அமித்ஷாவுக்கு எதிராக பேசிய வழக்கில் ராகுல் காந்திக்கு மீண்டும் சம்மன்
ராகுல்காந்தி (பைல் படம்)
பெங்களூரு மாநாட்டில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு எதிராக கருத்து தெரிவித்ததாக தொடரப்பட்ட வழக்கில் காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்திக்கு ஜனவரி 6 ஆம் தேதி ஆஜராக நீதிமன்றம் மீண்டும் சம்மன் அனுப்பியுள்ளது.
ராகுல் காந்திக்கு மீண்டும் சம்மன் அனுப்பப்பட்டுள்ளதாகவும், ஜனவரி 6 ஆம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராவதாகவும் வழக்கறிஞர் சந்தோஷ் பாண்டே உறுதிப்படுத்தியுள்ளார்.
பாஜக மாவட்ட துணைத் தலைவராக இருந்த விஜய் மிஸ்ரா தாக்கல் செய்த வழக்கைத் தொடர்ந்து இந்த சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
முன்னதாக இந்த வழக்கு குறித்து பேசிய விஜய் மிஸ்ரா, "இந்த சம்பவம் நடந்தபோது நான் பாஜகவின் துணைத் தலைவராக இருந்தேன். அமித் ஷா ஒரு கொலைகாரன் என்று பெங்களூரில் ராகுல் காந்தி குற்றம் சாட்டியிருந்தார். இந்த குற்றச்சாட்டுகளை கேட்டபோது, நான் கட்சியின் 33 வயது தொண்டன் என்பதால் மிகவும் வேதனை அடைந்தேன். இது தொடர்பாக எனது வழக்கறிஞர் மூலம் புகார் அளித்தேன். இது கிட்டத்தட்ட 5 ஆண்டுகளாக தொடர்ந்தது. இன்று இது முடிவுக்கு வந்தது.
காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்திக்கு எதிராக போதுமான ஆதாரங்கள் கண்டுபிடிக்கப்பட்டால் அவருக்கு அதிகபட்சம் 2 ஆண்டுகள் தண்டனை விதிக்கப்படலாம் என்று வழக்கறிஞர் பாண்டே தெரிவித்தார்.
இதுகுறித்து வழக்கறிஞர் பாண்டே கூறுகையில், "கடந்த 2018 ஆகஸ்ட் 4ம் தேதி அன்று, இந்த வழக்கு சுல்தான்பூர் எம்.பி-எம்.எல்.ஏ நீதிமன்றத்தின் மாவட்ட மற்றும் அமர்வு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. கடந்த 2018-ம் ஆண்டு பெங்களூருவில் நடந்த கர்நாடக தேர்தலின் போது ராகுல் காந்தி இந்த அறிக்கையை வெளியிட்டார். இந்த தகவல் சமூக ஊடகங்கள் மற்றும் டிவி செய்தி சேனல்கள் வழியாக வந்தபோது, அப்போதைய பாஜகவின் மாவட்ட துணைத் தலைவர் விஜய் மிஸ்ரா புகார் அளித்தார்" என்று பாண்டே கூறினார்.
புகாரில் 3 சாட்சிகளிடம் வாக்குமூலம் பெறப்பட்டது. இந்த வழக்கில் ராகுல் காந்திக்கு எதிராக போதுமான ஆதாரங்கள் கிடைத்தால் அவருக்கு அதிகபட்சம் 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படலாம். ஒன்று ராகுல் காந்தி நீதிமன்றத்தில் ஆஜராகி ஜாமீன் பெற வேண்டும். ராகுல் காந்தி வராவிட்டால் அவர் மீது நீதிமன்றம் நடவடிக்கை எடுக்க வாய்ப்புள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu