ராகுல் காந்தி நவீன இந்தியாவின் மகாத்மா காந்தி: காங்கிரஸ் எம்.எல்.ஏ

ராகுல் காந்தி நவீன இந்தியாவின் மகாத்மா காந்தி: காங்கிரஸ் எம்.எல்.ஏ
X

சத்தீஸ்கர் காங்கிரஸ் எம்எல்ஏ அமிதேஷ் சுக்லா

2018 சட்டமன்றத் தேர்தலில் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற அமிதேஷ் சுக்லா, மகாத்மா காந்திக்கும் ராகுல் காந்திக்கும் இடையே பல ஒற்றுமைகள் இருப்பதாகக் கூறினார்.

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள சத்தீஸ்கர் காங்கிரஸ் எம்எல்ஏ அமிதேஷ் சுக்லா, முன்னாள் வயநாடு எம்பி ராகுல் காந்தியை நவீன இந்தியாவின் மகாத்மா காந்தி என்று குறிப்பிட்டார்.

2018 சத்தீஸ்கர்சட்டமன்றத் தேர்தலில் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற சுக்லா, மகாத்மா காந்திக்கும் ராகுல் காந்திக்கும் இடையே பல ஒற்றுமைகள் இருப்பதாகக் கூறினார்.

இது குறித்து கூறிய அமிதேஷ் சுக்லா, ராகுல் காந்தி நவீன இந்தியாவின் மகாத்மா காந்தி. மகாத்மா காந்தியுடன் அவருக்கு நிறைய ஒற்றுமைகள் உள்ளன. ராகுல் காந்தி பாரத் ஜோடோ யாத்ரா செய்தார், அதே சமயம் மகாத்மா காந்தி தண்டி யாத்திரை மேற்கொண்டார் என்று கூறினார்.

ராகுலை ‘ராஷ்ட்ரிய புத்ரா’ (தேசத்தின் மகன்) என்று கூறிய அவர் மேலும் கூறுகையில், "இந்த அறிக்கையை நான் மிகவும் பொறுப்புடன் கூறுகிறேன். நான் சுதந்திரப் போராட்ட வீரர்களின் குடும்பத்தைச் சேர்ந்தவன். எனது தந்தை (ஷ்யாமா சரண் சுக்லா, பிரிக்கப்படாத மத்தியப் பிரதேசத்தின் முன்னாள் முதல்வர்) மற்றும் மாமா (காங்கிரஸ் மூத்த தலைவர் வித்யா சரண் சுக்லா) ஆகியோரிடம் மகாத்மா காந்தியைப் பற்றி,கேட்ட விஷயங்கள். மகாத்மா காந்திக்கும் ராகுல் காந்திக்கும் பல ஒற்றுமைகள் இருப்பதாக நான் உணர்கிறேன்.

மேலும், மகாத்மா காந்தியால் இந்தியாவின் முதல் பிரதமராக முடியும் என்றும் ஆனால் அவர் அவ்வாறு செய்யவில்லை. நேருவை பிரதமாக்கினார் அதேபோல், 2004 மற்றும் 2008ல் ராகுல் காந்தி பிரதமராக வாய்ப்பு இருந்தது. ஆனால் அவர் வரவில்லை. மகாத்மா காந்தி 'தண்டி யாத்திரையின்' போது பல கிலோமீட்டர்கள் அணிவகுத்தது போலவே, கட்சியின் முன்னாள் தேசியத் தலைவரும் பாரத் ஜோடோ யாத்திரையின் போது நாடு முழுவதும் நடந்து சென்று மக்களுடன் உரையாடினார்.

'பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தை' தனது சத்திய ஆயுதத்தால் முடிவுக்குக் கொண்டு வந்த மகாத்மா காந்தியைப் போலவே, ராகுல் காந்தியும் அச்சமின்றி உண்மையைப் பேசுகிறார் என்று சுக்லா கூறினார்.

சுக்லாவின் அறிக்கைக்கு கடுமையாக பதிலளித்த பாஜக எம்பி சந்தோஷ் பாண்டே, சத்தீஸ்கர் காங்கிரஸ் மனரீதியாகவும் அறிவு ரீதியாகவும் திவாலாகிவிட்டதாகக் கூறினார்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்