ரேபரேலி, வயநாடு ஆகிய 2 தொகுதியிலும் முன்னிலையில் உள்ள ராகுல் காந்தி

ரேபரேலி, வயநாடு ஆகிய 2 தொகுதியிலும் முன்னிலையில் உள்ள ராகுல் காந்தி

ராகுல் காந்தி.

ரேபரேலி, வயநாடு ஆகிய 2 தொகுதியிலும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி முன்னிலையில் உள்ளார்.

நாடாளுமன்றத் தேர்தலில் ரேபரேலி, வயநாடு ஆகிய இரண்டு தொகுதிகளிலும் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி முன்னிலையில் உள்ளார்.

18 வது மக்களவையை அமைப்பதற்கான நாடாளுமன்ற தேர்தல் இந்தியா முழுவதும் ஏழு கட்டங்களாக நடைபெற்றது. ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்கிய வாக்குப்பதிவானது ஜூன் 1ஆம் தேதி முடிவுற்றது. இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் அனைத்தும் இன்று காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு வருகிறது. இதில் தற்போதைய நிலவரப்படி பாரதிய ஜனதா கூட்டணி வேட்பாளர்கள் அதிக இடங்களில் முன்னிலையில் உள்ளனர்.

அதற்கு ஈடு கொடுக்கும் வகையில் காங்கிரஸ் கூட்டணி வேட்பாளர்களும் கணிசமான தொகுதிகளில் முன்னிலையில் உள்ளனர். காலை 11 மணி நிலவரப்படி பாரதிய ஜனதா கூட்டணி வேட்பாளர்கள் 300 இடங்களிலும் காங்கிரஸ் கூட்டணி வேட்பாளர்கள் 221 இடங்களிலும் முன்னிலையில் உள்ளனர். அந்த வகையில் காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணி பாரதிய ஜனதாவுக்கு சளைத்தது என்பதை நிரூபித்துள்ளது.

பிரதமர் மோடி வாரணாசி தொகுதியில் முதலில் பின்னடைவை சந்தித்தாலும் தற்போது அடுத்தடுத்த சுற்றுகளில் முன்னிலை பெற்று வருகிறார். ஆனால் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியோ தான் போட்டியிட்ட இரண்டு தொகுதிகளிலும் தொடர்ந்து முன்னிலை பெற்று வருகிறார். ஒரு சுற்றில் கூட அவருக்கு பின்னடைவு ஏற்பட்டதில்லை.

உத்தரப்பிரதேச மாநிலம் ரேபரேலி தொகுதியில் ராகுல் காந்தி அவரை எதிர்த்து போட்டியிட்ட பிஜேபி வேட்பாளரை விட சுமார் 50,000 வாக்குகள் முன்னிலையில் உள்ளார். அதே நேரத்தில் கேரள மாநிலத்தின் வயநாடு தொகுதியில் ராகுல் காந்தி அவரை எதிர்த்து போட்டியிட்ட கம்யூனிஸ்ட் வேட்பாளர் ஆனி ராஜாவை விட ஒரு லட்சம் வாக்குகளுக்கு மேல் கூடுதல் பெற்றுள்ளார்.

கடந்த தேர்தலின் போது ராகுல் காந்தி உத்தரப் பிரதேசத்தின் அமேதி தொகுதியில் ஸ்மிரிதி ராணியிடம் தோல்வியை தழுவினார். வயநாடு தொகுதியில் மட்டும் வெற்றி பெற்றிருந்தார். ஆனால் இந்த தேர்தலில் தான் போட்டியிட்ட இரண்டு தொகுதிகளிலும் ராகுல் காந்தி அதிக வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை பெற்று வருவது காங்கிரஸ் கட்சியினருக்கு புதிய உற்சாகத்தை கொடுத்துள்ளது.

Tags

Read MoreRead Less
Next Story