லக்கிம்பூர் வன்முறை: உயிரிழந்தவர்கள் குடும்பத்தினரைச் சந்தித்த ராகுல், பிரியங்கா
லக்கிம்பூர் வன்முறையில் உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறும் ராகுல், பிரியங்கா
உத்தரபிரதேசத்தின் லக்கிம்பூர் கேரியில் கடந்த 3ம் தேதி நடைபெற இருந்த நிகழ்ச்சியில் மத்திய உள்துறை இணை அமைச்சர் அஜய் மிஸ்ரா கலந்து கொள்வதை அறிந்த விவசாயிகள் கறுப்புக் கொடி காட்டி தங்கள் எதிர்ப்பை தெரிவிப்பதற்காக திரண்டனர். ஆனால் அவர்கள் மீது காரி மோதியதால், அங்கு வன்முறை வெடித்து, 4 விவசாயிகள் உட்பட 9 பேர் உயிரிழந்தனர்.
இதனை தொடர்ந்து உயிரிழந்த விவசாயிகள் குடும்பத்தை சந்திக்க செல்ல முயன்ற பிரியங்கா காந்தி, அகிலேஷ் யாதவ் ஆகியோர் தடுத்து நிறுத்தப்பட்டனர். தொடர்ந்து லக்னோ விமான நிலையத்தில் சத்தீஸ்கர் முதலமைச்சர் பூபேஷ் பாகலையும் அனுமதிக்காமல் உபி அரசு தடைவிதித்தது. அதுமட்டுமில்லாமல் காங்கிரஸ் மக்களவை உறுப்பினர் ராகுல் காந்தி, பஞ்சாப் மாநில முதலமைச்சர் சரண்ஜீத் சிங் சன்னி ஆகியோரும் தடுத்து நிறுத்தப்பட்டனர்.
காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தியை போலீஸார் தடுத்து நிறுத்தி தடுப்புக்காவலில் வைத்திருந்த நிலையில், நேற்று காலையில் அவர் விடுவிக்கப்பட்டார். ஆனாலும் விவசாயிகள் குடும்பத்தை சந்திக்க ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்திக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இதற்கு காங்கிரஸ் கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதனை தொடர்ந்து ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, இவர்களுடன் சத்தீஸ்கர் மாநில முதலமைச்சர் பூபேஷ் பாகல், பஞ்சாப் மாநில முதலமைச்சர் சரண்ஜீத் சிங் சன்னி, மாநிலங்களவை உறுப்பினர் தீபெந்தெர் சிங் ஹூடா ஆகிய 5 பேருக்கு மட்டும் லக்கிம்பூர் செல்ல அனுமதி அளிக்கப்பட்டது. இவர்கள் சென்ற இடங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது. மொத்தம் ஏழு வாகனங்கள் மட்டுமே இவர்களைப் பின்தொடர்ந்து செல்ல அனுமதிக்கப்பட்டன.
அதனைத் தொடர்ந்து, தாக்குதலில் கொல்லப்பட்ட உள்ளூர் செய்தியாளர் ராமன் கஷ்யாப் வீட்டிற்கும் சென்றனர்.
இதனை தொடர்ந்து ராகுல் காந்திதனது ட்விட்டர் பக்கத்தில் ராகுல் காந்தி, தியாகி லவ்ப்ரீத்தின் குடும்பத்தினருடன் துக்கத்தை பகிர்ந்துகொண்டேன். ஆனால் நீதி கிடைக்கும் வரை, இந்த சத்தியாகிரகம் தொடரும். உங்கள் தியாகத்தை மறக்க மாட்டேன் லவ் ப்ரீத் என்று குறிப்பிட்டுள்ளார்.
மற்றொரு பதிவில், பத்திரிக்கையாளர் தியாகி ராமன் காஷ்யப்பின் குடும்பத்தினருக்கு எனது இரங்கலை தெரிவித்தேன். மனிதாபிமானமற்ற செயலால் தங்கள் அன்பானவர்களை இழந்த குடும்பங்களுக்கு என்ன வேண்டும்? நீதி. குற்றவாளிகள் உடனடியாக கைது செய்யப்பட்டு அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட வேண்டும். உடனடியாக நீதி வழங்கப்பட வேண்டும் என கூறியுள்ளார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu