நடப்பாண்டு குறுவை சாகுபடியில் நெல் கொள்முதல்: சுமார் 30,000 விவசாயிகள் பயன்

நடப்பாண்டு குறுவை சாகுபடியில் நெல் கொள்முதல்:  சுமார் 30,000 விவசாயிகள் பயன்
X

தகவல்கள்.

நடப்பாண்டு குறுவை சாகுபடியில் நெல் கொள்முதல் செய்யப்பட்டு சுமார் 30,000 விவசாயிகள் பயனடைந்துள்ளனர்.

நாடு முழுவதும் நடப்பாண்டு குறுவை சாகுபடியில் கடந்த 5ம் தேதி வரை, 894.24 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதலுடன் முடிவடைந்தது. கடந்த 2020-21ம் ஆண்டில் கொள்முதல் மூலம் சுமார் 131.14 லட்சம் விவசாயிகள், ரூ.1,68,832.78 கோடி குறைந்தபட்ச ஆதரவு விலை பெற்று பயனடைந்தனர்.

அதேபோல், குறுவை சாகுபடி சந்தைப் பருவத்தில், 433.44 லட்சம் மெட்ரிக் டன் கோதுமை கொள்முதல் செய்யப்பட்டது. இதற்காக 49.20 லட்சம் விவசாயிகள் ரூ.85,603.57 கோடி குறைந்தபட்ச ஆதரவு விலை பெற்றுள்ளனர்.

நடப்பாண்டு 2021-22 குறுவை சாகுபடி சந்தைப் பருவத்தில், கடந்த 5ம் தேதி வரை 2,87,552 மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டு, 29,907 விவசாயிகளுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையாக ரூ.563.60 கோடி வழங்கப்பட்டது.

Tags

Next Story