சொன்னா நம்ப மாட்டீங்க... ஊழல் வழக்கில் அமைச்சர் உடனடியாக கைது
விஜய் சிங்கலா
பஞ்சாப்பில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி, முதல்முறையாக ஆட்சியை கைப்பற்றியது. அங்கு, பகவந்த் மான் தலைமையிலான அரசு, மார்ச் 16-ஆம் தேதி பதவி ஏற்றது.
அமைச்சரவையில் சுகாதாரத்துறை அமைச்சராக, 52 வயது பல் மருத்துவர் விஜய் சிங்கலா பதவி ஏற்றார். இவர் பதவி ஏற்று 100 நாட்கள் கூட ஆகாத நிலையில், ஊழல் புகாரில் சிக்கினார். இதையடுத்து, உடனடியாக அவர் நேற்று பதவியை விட்டு நீக்கப்பட்டார்.
இது தொடர்பாக, முதல்வர் பகவந்த் மான் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில், ஆம் ஆத்மி கட்சி நேர்மையான கட்சி. 1 ரூபாய் லஞ்சத்தைக் கூட சகித்துக்கொள்ளாது. சுகாதாரத்துறை அமைச்சர் மீது ஊழல் புகார் எழுந்தது. இது என் கவனத்துக்கு வந்தது.
அதாவது, டெண்டர்கள் மீது சுகாதார அமைச்சர், 1 சதவீதம் கமிஷன் கேட்பதாக வந்த புகாரில், அவரை பதவி நீக்கம் செய்கிறேன். அவர் மீது வழக்கு பதிவு செய்ய, காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
இதைத் தொடர்ந்து, பதவி நீக்கம் செய்யப்பட்ட விஜய் சிங்கலா மீது ஊழல் வழக்கு பதிவு செய்யப்பட்டு, அதே சூட்டோடு நள்ளிரவில் போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இது, பஞ்சாப்பில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
லஞ்சை வழக்கில் அமைச்சர் பதவி நீக்கம் செய்ததோடு, கைது செய்து சிறையில் அடைப்பது என்பது, ஊழல் மிகுந்துள்ள நம் நாட்டில், மிகவும் அரிய நிகழ்வாக கருதப்படுகிறது. ஆம் ஆத்மி அரசின் இந்த முன்னுதாரண செயல்பாட்டை, பலரும் பாராட்டி வருகின்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu