புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி குணமடைந்து வீடு திரும்பினார்

புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி குணமடைந்து வீடு திரும்பினார்
X

கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பினார்.

முன்னதாக, புதுச்சேரி முதல்வராக கடந்த 7ஆம் தேதி பொறுப்பேற்றுக் கொண்ட என்.ஆர்.காங்கிரஸ் கட்சியின் தலைவர் ரங்கசாமிக்கு 9ஆம் தேதி கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. இதையடுத்து, சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவர் சிகிச்சை பெற்று வந்தார்.

இந்நிலையில், முழுமையாக குணம் அடைந்த ரங்கசாமி மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். வீடு திரும்பிய அவரை மேலும் சில நாட்கள் தனிமைப்படுத்திக் கொள்ளுமாறு மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!