குடியரசு தினத்தையொட்டி சுப்ரீம் கோர்ட் தீர்ப்புகள் தமிழில் வெளியீடு

குடியரசு தினத்தையொட்டி சுப்ரீம் கோர்ட் தீர்ப்புகள் தமிழில் வெளியீடு
X

பைல் படம்.

குடியரசு தினத்தையொட்டி 1,091 சுப்ரீம் கோர்ட் தீர்ப்புகள் தமிழ் உள்ளிட்ட மொழிகளில் வெளியிடப்படும் என்று தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் அறிவித்துள்ளார்.

மகாராஷ்டிரா-கோவா வக்கீல்கள் சங்கம் சார்பில் சமீபத்தில் நடந்த நிகழ்ச்சியில் சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் பங்கேற்றார். அப்போது அவர் பேசும் போது, "சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்புகள் பிராந்திய மொழிகளில் மொழி பெயர்க்கப்பட வேண்டும். அதற்காக தொழில்நுட்ப வசதிகளை பயன்படுத்தலாம்" என்றார். இதை பிரதமர் நரேந்திர மோடி, முதல்வர் ஸ்டாலின் மற்றும் அரசியல் தலைவர்கள் வரவேற்று இருந்தனர்.

இந்நிலையில் ஆயிரத்துக்கும் அதிகமான சுப்ரீம் கோர்ட் தீர்ப்புகள் நாளை தமிழ் உள்ளிட்ட பிராந்திய மொழிகளில் வெளியிடப்படுகிறது. குடியரசு தினத்தையொட்டி 1,091 சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்புகள் தமிழ் உள்ளிட்ட மொழிகளில் வெளியிடப்படும் என்று சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் அறிவித்துள்ளார். 1,091 தீர்ப்புகள் தமிழ் உள்ளிட்ட அதிகாரப்பூர்வமான மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டு வெளியிடப்படுகிறது.

இது மிகவும் முக்கிய அறிவிப்பாகும். சுப்ரீம் கோர்ட் இணையதளத்தில் தீர்ப்புகள் பிராந்திய மொழிகளில் வெளியாகிறது. மொழிப்போர் தியாகிகள் தினம் கொண்டாடப்படும் இந்த நாளில் இந்த அறிவிப்பு மிகவும் பொருத்தமானதாக இருக்கும் இந சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.

Tags

Next Story
கொடுமுடியில் விவசாயிகள் போராட்டம் - அதிகாரிகள் செயலாற்றாமல் இருந்ததா