கைது செய்ய தடை கோரி நுபுர் ஷர்மா உச்சநீதிமன்றத்தில் மனு
நபிகள் நாயகம் குறித்து சர்ச்சைக்குரிய கருத்தை வெளியிட்ட பெண் பேச்சாளர் நுபுர்சர்மா.
நுபுர் ஷர்மா, முகமது நபிக்கு எதிரான தனது சர்ச்சைக்குரிய கருத்துக்கு எதிராக ஒன்பது எஃப்ஐஆர்களை எதிர்கொண்டுள்ள நிலையில், எப்ஐஆர்களில் எதிலும் தன்னைக் கைது செய்ய தடை விதிக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
இம்மாத தொடக்கத்தில் தொலைக்காட்சியில், நபிகள் நாயகம் பற்றி நுபுர் ஷர்மா தெரிவித்த கருத்துக்களுக்கு எதிராக உச்சநீதிமன்றம் கடுமையாக விமர்சித்ததுடன், நாட்டில் நிலவும் அமைதியின்மைக்கு அவர் மட்டுமே பொறுப்பு என்று கூறியது.
நாட்டின் அமைதியின்மைக்கு (நுபுர்ஷர்மா) தான் பொறுப்பு என்று உச்சநீதிமன்றம் கூறியதையடுத்து, தனது உயிருக்கு அச்சுறுத்தல் அதிகரித்துள்ளதாகவும், தனது கருத்துக்கு எதிராக உச்சநீதிமன்றத்தின் கடுமையான விமர்சனத்திற்குப் பிறகு, தனக்கு தொடர்ந்து கொலை மிரட்டல் வருவதாகவும் கூறினார். மேலும் டெல்லியில் பதியப்பட்டுள்ள எஃப்.ஐ.ஆர்.களை இணைக்கும்படி அவர் கேட்டுக் கொண்டார்
அவரது முதல் மனுவை விசாரித்த அதே பெஞ்ச் முன் அவரது சமீபத்திய மனு பட்டியலிடப்பட்டுள்ளது. இந்த வழக்கை நீதிபதி சூர்ய காந்த், நீதிபதி ஜேபி பர்திவாலா ஆகியோர் அடங்கிய அமர்வு நாளை விசாரிக்கிறது.
முகமது நபிக்கு எதிராக நுபுர் ஷர்மா கூறிய கருத்து பெரும் சர்ச்சையை கிளப்பியது மற்றும் அவர் மீது பல எஃப்ஐஆர்கள் பதிவு செய்யப்பட்டன.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu