கோவிட்-19 தடுப்பூசியின் இரண்டாவது டோஸை பிரதமர் எடுத்துக் கொண்டார்

கோவிட்-19 தடுப்பூசியின் இரண்டாவது டோஸை பிரதமர் எடுத்துக் கொண்டார்
X

பிரதமர் திரு.நரேந்திர மோடி, கொவிட்-19 தடுப்பூசியின் இரண்டாவது டோஸை இன்று எடுத்துக் கொண்டார்.

திரு. மோடி வெளியிட்டுள்ள சுட்டுரைச் செய்தியில், "இன்று எய்ம்ஸ் மருத்துவமனையில் கொவிட்-19 தடுப்பூசியின் இரண்டாவது டோஸை எடுத்துக் கொண்டேன்.இந்த வைரசை முறியடிப்பதற்கு நம்மிடம் இருக்கும் ஒரு சில வழிகளில் தடுப்பூசியும் ஒன்று.

தடுப்பூசியை எடுத்துக் கொள்ளும் தகுதி உங்களுக்கு இருந்தால், உடனே செலுத்திக் கொள்ளுங்கள். CoWin.gov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்துக் கொள்ளுங்கள்" என்று கூறியுள்ளார்.





Tags

Next Story
மல்லசமுத்திரத்தில் கொப்பரை வர்த்தகம்: விவசாயிகள் சந்தித்த நன்மைகள்