இன்பினிட்டி அமைப்பை டிசம்பர் 3-ந் தேதி தொடங்கி வைக்கிறார் பிரதமர் நரேந்திரமோடி
பிரதமர் நரேந்திரமோடி
'அப்பால்' என்னும் கருப்பொருள் மையமாக எடுத்துக்கொள்ளப்படுகிறது; 'எல்லைகளுக்கு அப்பால் ஃபின்டெக்', 'நிதிக்கு அப்பால் ஃபின்டெக்', 'அடுத்ததற்கு அப்பால் ஃபின்டெக்' உள்பட பல்வேறு துணை கருப்பொருட்கள் கவனத்தில் கொள்ளப்படும்.
பிரதமர் நரேந்திர மோடி, ஃபின்டெக் தொடர்பான இன்பினிட்டி அமைப்பை டிசம்பர் 3-ந் தேதி காணொலி மூலம் தொடங்கி வைக்கிறார்.
சர்வதேச நிதியியல் சேவைகள் மையங்களின் ஆணையம், இந்திய அரசின் கீழ் கிப்ட் சிட்டி, மற்றும் ப்ளும்பெர்க்குடன் இணைந்து டிசம்பர் 3 மற்றும் 4 ஆகிய தேதிகளில் இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்துள்ளது. இந்தோனேஷியா, தென்னாப்பிரிக்கா, பிரிட்டன் ஆகிய நாடுகள் இந்த அமைப்பின் முதல் அமர்வின் கூட்டாண்மை நாடுகளாக இருக்கும்.
கொள்கை, வர்த்தகம், தொழில்நுட்பத்தில் உலகின் முன்னணி சிந்தனைகளை இன்பினிட்டி அமைப்பு ஒன்று சேர்க்கும். அனைவருக்குமான வளர்ச்சி மற்றும் மனிதகுலத்துக்கு பெருமளவில் சேவை புரிவதற்காக தொழில்துறையின் ஒத்துழைப்புடன் தொழில்நுட்பமும், புதிய கண்டுப்பிடிப்புகளும் செயல்படுவது குறித்து இதில் விவாதிக்கப்படும்.
இந்த அமைப்பின் முக்கிய கருப்பொருள் 'அப்பால்' என்பதாகும். புவியியல் எல்லைகளை தாண்டி அரசுகள் மற்றும் வர்த்தக நிறுவனங்களுடன் ஃபின்டெக் உலக மேம்பாட்டுக்கு வழிவகுப்பது குறித்து ஆலோசிக்கப்படும். நிதிக்கு அப்பால் ஃபின்டெக், ஸ்பேஸ்டெக், கிரின்டெக், அக்ரிடெக் போன்ற பல்வேறு அம்சங்களை உள்ளடக்கியதாக இருக்கும். பின்டெக் தொழிலில் ஏற்படும் தாக்கம், வருங்காலத்தில் புதிய வாய்ப்புகளை மேம்படுத்துவது குறித்து முக்கிய விவாதங்கள் நடைபெறும்.
70 நாடுகளுக்கு மேல் இந்த அமைப்பில் கலந்து கொள்ள உள்ளன. மலேசியாவின் நிதி அமைச்சர் டென்கு சர்புல் அசீஸ், இந்தோனேஷிய நிதி அமைச்சர் ஸ்ரீமுல்யானி இந்திராவதி. இந்தோனேஷிய பொருளாதார உருவாக்க அமைச்சர் சந்தியாக எஸ் யுனோ, ரிலையன்ஸ் நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானி, சாப்ட்பேங்க் குருப் கார்ப்பரேன் தலைவர் மசயோஷி சன், ஐபிஎம் கார்ப்பரேஷன் தலைவர் அரவிந்த் கிருஷ்ணா, கோடக் மகேந்திரா பேங்க் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குனர் மற்றும் சிஇஓ உதய் கோடக் உள்ளிட்டோர் இந்த நிகழ்ச்சியில் சிறப்புரையாற்றுவார்கள். நிதிஆயோக், இன்வெஸ்ட் இந்தியா, ஃபிக்கி, நாஸ்க்காம் ஆகியவை இந்த ஆண்டின் முக்கிய கூட்டு நிறுவனங்களாகும்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu